புதுக்கடையில் தாயுடன் தூங்கிய கல்லூரி மாணவி மாயம்
புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதியைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி தர்ஷனா, வீட்டில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் விஜிலா புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...
குமரியில்: வெடிபொருள் பதுக்கிய பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது
திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் குணசீலன் (52) வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 27 டெட்டனேட்டர்கள் மற்றும் 30 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலை விற்பனை தொடர்பாக போலீஸார் சோதனை செய்தபோது இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக குணசீலன் மற்றும் ராஜன் ஆகிய...
செங்கல் சிவபார்வதி கோயிலில் இலவச நோட் புத்தகங்கள் வழங்கல்
களியக்காவிளை அருகே உள்ள செங்கல் சிவபார்வதி கோவிலில் புதிய கல்வி ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பேனா, புத்தகப் பை, குடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி, மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்க அறிவுரை வழங்கி...
தமிழகத்தில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது -அமைச்சர்
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்று இருபது நாட்களே ஆன நிலையில், காவல்துறை மற்றும் சிங்கப்படை போன்ற அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதாகவும், உடனடியாக குற்றங்களைக் கண்டறிவது கடினம் என்றும்...
குளச்சல்: சிறுமியை செல்போனில் படம் பிடித்தவர் கைது
நேற்று முன்தினம் வாணியக்குடி கடற்கரைக்கு சென்று திரும்பிய ஷானு (34) என்பவர், அப்பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை செல்போனில் தவறான முறையில் படம்பிடிக்க முயன்றார். மாணவி சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் துரத்த முயன்றபோது ஷானு செல்போனை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார். இது...
திருவட்டாறு: நகை கடையில் மோசடி; 2 பேர் கைது
அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஜெயசுதா மற்றும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் மனைவி, குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த சுதர்லின் ஆகியோர் மன்சூர் அலி நடத்தும் நகை அடகு கடையில் நகைகளை அடகு வைத்து ஏமாற்றப்பட்டனர். நகைகளைத் திரும்பக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது....
குமரியில்: சொத்தின் பேரில் பண மோசடி; 6 பேர் மீது வழக்கு
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த மணியன் (72) என்பவர், குமரி மாவட்டம் ஆற்றூரில் உள்ள தனது நிலத்தை குளச்சல் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருக்கு விற்க ஒப்புக்கொண்டார். இதற்காக மணி, மணியனுக்கு ரூ. 1 கோடியே 10 லட்சம் முன் பணமாக வழங்கினார். 19 சென்ட்...
குமரியில்: தோழியுடன் சுற்றிய சிறுவன்; கண்டித்தவர் மீது தாக்குதல்
மணவாளக்குறிச்சி அருகே, தென்னந்தோப்பில் நின்றிருந்த விவசாயி குமரேசனை, 15 வயது சிறுவன் ஒருவன் தனது தோழியுடன் அங்கு வந்தபோது கண்டித்ததால், ஆத்திரமடைந்த சிறுவன் மேலும் இருவரை அழைத்து வந்து விவசாயியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த விவசாயி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மணவளக்குறிச்சி போலீசார் சிறுவன்...
நாகர்கோவிலில் பெட்ரோல் கலப்படம்: வாலிபர்கள் பெட்ரோல் பங்க் முற்றுகை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வேப்பமூடு பயோனியர் பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் கலப்படம் நடந்ததாகக் கூறி வாலிபர்கள் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டி ஒருவர் பெட்ரோல் அடித்த பிறகு அவரது வாகனம் பழுதானதால், நண்பர்களுடன் பெட்ரோல் பங்கிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பெட்ரோல்...
பெட்ரோல் பங்கில் திடீரென தீப்பிடித்த பைக் – பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று இரவு கலெக்டர் அலுவலகம் சந்திப்புப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்பியுள்ளார். பெட்ரோல் நிரப்பிய பிறகு மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தபோது திடீரென தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினர்...












