தக்கலை: இரவில் 3 கார்கள் மோதல்; போலீஸ் விசாரணை
தக்கலை அருகே மணலி சந்திப்பு பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் மூன்று கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த சிலர் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி கொண்டாட்டத்தின் போது...
தக்கலை: பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி
மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் (52) என்பவர் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவரது வீடு பூட்டிய நிலையில் இருந்தபோது, நேற்று முன்தினம் நள்ளிரவில் கதவை உடைத்து திருடர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்களுக்கு எதுவும்...
இரையுமன்துறை: வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வை
கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை பகுதியில் ரூ 35 கோடி மதிப்பில் சாலைப்பணி மற்றும் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (20.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ. ராஜேஷ் குமார் ஆகியோர் இப்பணிகளை நேரில் பார்வையிட்டு...
நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் நிலவிய நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. நாகர்கோவில் பார்வதிபுரம், பறக்கை, புது கிராமம், தேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த...
படந்தாலுமூடு: வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேர் கைது
படந்தாலுமூடு பகுதியில் டீ குடிக்க வந்த பிரதீஷ் (43) என்பவரை, பிரதீஷ் (24) மற்றும் ராகுல் (28) ஆகிய இருவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது கால் உடைந்ததாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதீஷின் புகாரின் பேரில், களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு...
திக்கணம்கோடு: தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி
தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திக்கணங்கோடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி...
குமாரகோவில்: கேரளாவுக்கு கடத்திய 1700 கிலோ அரிசி பறிமுதல்
குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் அதிகாரிகள், 16-ம் தேதி அதிகாலை தக்கலை, குமாரகோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான சொகுசு காரை துரத்தி பிடித்தனர். காரில் இருந்த 3 பேர் தப்பி சென்றனர். காரில் இருந்து சுமார் 1700...
மார்த்தாண்டம்: போலீஸ் நிலையம் முற்றுகையிட்ட பக்தர்கள்
உண்ணாமலைக்கடை, முடியாம்பாறை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் உள்ள சித்தர் பீட சிவலிங்கத்தை மர்ம நபர்கள் உடைத்த சம்பவத்தை அடுத்து, கோவில் நிர்வாகிகள் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுநாள், கோவிலின் பூட்டை உடைத்து பத்திரகாளி அம்மன் சிலையை விளவங்கோடு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் எடுத்துச்...
கிள்ளியூர்: நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்பு அகற்றம்
கிள்ளியூர் தாலுகா, மத்திகோடு கிராமத்தின் மூவர்புரம் பகுதியில் உள்ள இலுப்பைகுளத்தின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 வீடுகளை, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் நேற்று (15-ம் தேதி) அதிரடியாக இடித்து அகற்றியுள்ளனர். இந்த சம்பவம்...
முள்ளங்கனாவிளை: ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
கருங்கல் பிரிவு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பப்புரான் குளத்திற்கு செல்லும் நீரோடையின் மேல் பகுதியிலும், நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்திலும் தனிநபர் ஒருவர் கடை அமைத்துள்ளார். இதனால், பெருமழைகாலங்களில் குளத்திற்கு மழை நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடையை உடனடியாக அகற்ற மாவட்ட...













