Google search engine

நாகர்கோவிலில் பாதுகாப்பு இன்றி திறந்த பாதாள குழி: மக்கள் அச்சம்

நாகர்கோவிலில் கே.பி ரோடு டிஸ்டிக் கிளப் அருகே சாலையோரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பாதாள குழி தோண்டப்பட்டுள்ளது. முக்கிய சாலையான இப்பகுதியில் ஏராளமான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர்...

குமரி: காட்டுப்பன்றி தாக்கி தொழிலாளி படுகாயம்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஆலம்பாறை பகுதியில் நேற்று காலை தொழிலாளி ராஜேஷ் காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாவட்ட வன அலுவலர் அன்பு நேரில் சென்று ராஜேஷை பார்வையிட்டு, வனத்துறை சார்பில் 5000 ரூபாய்...

குமரி: பைக் திருட்டு ; போலீசில் நடித்து காட்டிய வாலிபர்

குமரி மாவட்டத்தில் பைக் திருட்டு புகார்கள் தொடர்பாக தனிப்படையினர் விசாரணை நடத்தினர். கோட்டார், பூதப்பாண்டி, களியக்காவிளை காவல் நிலைய பகுதிகளில் திருடிய முஹம்மது சம்சீர் (23), திற்பரப்பு ஜெகன் (40), குளப்புறம் ரங்கேஷ் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள்...

தக்கலை: 17 கார்களில் பேட்டரிகள் திருடிய 2பேர் கைது

பத்மநாபபுரம் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் பேட்டரி திருட்டு சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று நடந்த ரோந்து பணியின் போது இரணியலை சேர்ந்த சுபின் (38) மற்றும் சாமியார்மடம் பகுதியை சேர்ந்த செல்வன் (33) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்....

களியக்காவிளை: பெண்ணை மிரட்டிய 6 பேர் மீது வழக்கு

திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா பாய் (57) என்பவரை, அதே பகுதியை சேர்ந்த பத்மமூர்த்தி (50) மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் சொத்து தகராறு தொடர்பாக கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சொத்து பிரச்சனை தொடர்பாக சமாதானம்...

புதுக்கடை: வாகனத்தில் பிணமாக காணப்பட்ட டிரைவர்

கிள்ளியூர், முளங்குழியைச் சேர்ந்த 31 வயது அஜின், நேற்று புதுக்கடை பகுதியில் சாலையோரம் தனது வாகனத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். குடிப்பழக்கம் கொண்ட அஜின், சொந்தமாக பிக்கப் வாகனம் ஓட்டி வந்தார். இது குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் உடலை மீட்டு குழித்துறை...

குமரி: கஞ்சா விற்பனை; விரட்டி பிடித்த போலீசார்

நாகர்கோவில் மது விலக்கு போலீசார் நேற்று தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோடிய சுமன் (26) என்பவரை துரத்திப் பிடித்தனர். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம்...

குமரி: கோதையாற்றில் வலம் வரும் ஒற்றை யானை

குமரி மலைகிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோதையாறு அரசு ரப்பர் தோட்டம் மற்றும் பேச்சிப்பாறை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் ஒற்றை யானை சுற்றி திரிவதால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி: வரதட்சணை கொடுமை ; கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சுபைதா (27) - ஜெரின் (27) இருவருக்கும் 2021 ல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, குழந்தை பிறப்பதைத் தடுக்க கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும்படி கணவர் குடும்பத்தினர் வற்புறுத்தியதாகவும், மேலும் வரதட்சணை கேட்டு சுபைதாவை வீட்டை விட்டு விரட்டியதாகவும் கூறப்படுகிறது....

ராமன்துறை: தாயை தாக்கிய மகள், மருமகன் மீது வழக்கு

ராமன்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சுபேதா (58) என்பவரின் மகள் கோகிலா, தனது தாய் வசிக்கும் வீட்டை தங்களது பெயருக்கு எழுதித் தருமாறு தாய் சுபேதாவிடம் கேட்டுள்ளார். தாய் மறுத்ததால், மகள் கோகிலாவும் அவரது கணவர் ஜெர்மன்ஸ்சும் சேர்ந்து சுபேதாவை தாக்கி, அவரது உடையைக் கிழித்து, மானபங்கப்படுத்தி,...