குமரி மக்களுக்கு ஆட்சியர் அழைப்பு

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கன்னியாகுமரியில் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 3 தினங்கள் நடைபெறுகிறது. "இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளிக்கல்வி துறை ஆசிரியர்கள், தமிழ் சங்கங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பாளராக கலந்து...

அருமனை: சாலையோர பள்ளத்தில் பைக் விழுந்து தொழிலாளி பலி

அருமனை அருகே முழுக்கோடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (49). இவரும் இவரது நண்பர் ரவி என்பவரும் கடந்த 19-ம் தேதி கூலி வேலைக்காக காலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் உள்ள பள்ளத்தில் பைக்குடன் இருவரும் விழுந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத...

கருங்கல்: கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. கருங்கல் அருகே கருமாவிளை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா போட்டி மற்றும் பேரணி நடத்தப்படுவது வழக்கம். இந்த...

புதுக்கடை: சாலையில் நடந்து சென்ற மீனவர் திடீர் மரணம்

குமரி மாவட்டம் இரவிபுத்தன் துறை பகுதியை சேர்ந்தவர் லூர்தையன் (64). மீனவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று (டிசம்பர் 22) இவர் புதுக்கடை அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டப பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தவறி...

கிள்ளியூர்: மீன் தொழிலாளர் சங்கம் கையெழுத்து இயக்கம்

குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் மீனவர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட நீரோடியில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு முன்சிறை ஒன்றிய தலைவர் பிராங்க்ளின் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்கலின், ஒன்றிய செயலாளர் விமல் ராஜ் உட்பட...

பார்த்திவபுரம்: கோவில்  திருட்டு.. 3-வது திருடன் கைது

புதுக்கடை அருகே பழமையான பார்த்திவபுரம் பார்த்தசாரதி கோவிலில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி மூன்று திருடர்கள் சுவர் ஏறி குதித்து வந்து கருவறையில் புகுந்து ஐந்து கிலோ உடைய சிவேலி ஐம்பொன் சிலையையும், ஒரு உலோக சிலையையும் வெள்ளி முகத்தையும், வெள்ளி அங்கியையும் திருடி சென்றனர். போலீசார்...

நாகர்கோவில் மேயர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் திமுக மாநகர, ஒன்றிய, நகர பகுதி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. கூட்டத்தில் கழகத் தலைவர் முதலமைச்சர் முக்கிய ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை பற்றியும், திருவள்ளுவர்...

களியல்: சந்தன மரம் வெட்டி கடத்த முயன்றவர் கைது

களியல் வனச்சரகப்பகுதி தமிழகம் மற்றும் கேரளா எல்லையை உள்ளடக்கியுள்ளது. கேரளா வனப்பகுதி தொடங்கி மேற்கு தொடர்ச்சி மலை வரை அடர்ந்த வனப்பகுதிகளாகும். இங்கு விலை உயர்ந்த ஏராளமான மரங்களும், அரிய வகை மூலிகைகளும் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனச்சரக ஊழியர்கள் ரோந்து சென்றனர்....

புதுக்கடை: சுற்றுலா துறை பணியாளர் திடீர் சாவு

புதுக்கடை அருகே காப்புக்காடு, தாழவிளை பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (58). இவர் ஹைதராபாத்தில் சுற்றுலா துறையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உண்டு. அவர்கள் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டனர். அதன் பின் சிகாமணி...

கீழ்குளம்: பேருராட்சியில் கிறிஸ்மஸ் நல உதவிகள்

கீழ்குளம் பேரூராட்சியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று (20-ம் தேதி) கொண்டாடப்பட்டது. அனைத்து தூய்மைப் பணியாளர்கள், மசூர் பணியாளர்களுக்கு பேரூராட்சித் தலைவர் சரளா கோபால் புத்தாடை வழங்கி, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செயலாளுவலர் ரகுநாதன், அனைத்து பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சிப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப்...