கூட்டாலுமூடு: பத்ரேஸ்வரி அம்மன் கோயில் பால்குட ஊர்வலம்

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 4-ம் தேதி துவங்கியது. ஒன்பதாம் திருவிழாவில் இன்று காலை மார்த்தாண்டம் நல்லூர் குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்தனர். இந்த ஊர்வலமானது மார்த்தாண்டம், வெட்டுமணி, காப்புக்காடு குன்னத்தூர், முன்சிறை, புதுக்கடை...

மிடாலம்: ரூ. 1. 62 கோடியில் சாலை பணிகள் எம்எல்ஏ தொடங்கினார்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிடாலம் ஊராட்சியில் உள்ள பல்வேறு சாலைகள் சேதம் அடைந்த நிலையில் காணப்பட்டன. இந்த நிலையில் இந்தப் பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க நபார்டு மற்றும் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 61 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்...

காப்புக்காடு: தொல்காப்பியர் சிலைக்கு மரியாதை

தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூலின் ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்பிக்காட்டில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது.  மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் தொல்காப்பியர் அறக்கட்டளையின் சார்பில், தொல்காப்பியர் 2736-வது பிறந்த நாளையொட்டி, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் தவினய்குமார் மீனா, இன்று (12.05.2025)...

குமரி: பெண் போலீசிடம் அவதூறாக பேசிய வக்கீல் உள்பட 7பேர் மீது வழக்கு

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் கொடைவிழா நடந்து வருகிறது. விழாவை யொட்டி சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது. அங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் பெண் போலீஸ் சங்கீதா (வயது 40) என்பவர் ஈடுபட்டார்.  அப்போது அந்த...

குளச்சல்: ஆட்டோ ஓட்டுநர் நேர்மைக்கு தமுமுக பாராட்டு விருது

குளச்சல் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ ஓட்டி வரும் குளச்சல் இலப்பவிளை பகுதியைச் சேர்ந்த அன்வர் சாதிக்கின் ஆட்டோவில் 14/4/2025 அன்று காலை பயணம் செய்த பெண் தவறவிட்ட ரூபாய் 67,000 பணத்தை மீட்டு குளச்சல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையான செயலுக்கு...

நித்திரவிளை: பைக் மோதி கொத்தனார் படுகாயம்

நித்திரவிளை அருகே சரல்முக்கு பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (48). கொத்தனார். நேற்று இரவு நெல்சன் பைக்கில் சின்னத்துறை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (29) என்ற வாலிபர் போதையில் பைக் ஓட்டி வந்து நெல்சன் மீது மோதியுள்ளார்.  இதில் உடலில் பல்வேறு இடங்களில்...

கருங்கலில் பேருந்து நிலைய கட்டட பணிகள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் புதிதாக ரூ. 5. 22 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையமாக அமைய உள்ள கருங்கல் பேருந்து நிலையத்தை நேற்று பால்வளத்துறை அமைச்சர் T. மனோ தங்கராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் சென்று பேருந்து நிலையம் நவீன...

மார்த்தாண்டம் புதிய சந்தை பகுதியில் எம்எல்ஏ ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்படும் சந்தை சரியான முறையில், சரியான தரத்தில் கட்டப்படுகிறதா என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நகராட்சி தலைவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

களியக்காவிளை: மகாதேவர் கோயிலில் பூரம் திருவிழா

களியக்காவிளை அருகே பாறசாலை ஸ்ரீ மகாதேவர் கோயில் சித்திரை திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (மே.11) மாலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் 7 யானைகள் பங்கேற்ற பூரம் விழா நடந்தது. இரவு 10 மணிக்கு பாறசாலை சந்திப்பில் குடைமாற்றல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான...

இனயம்: மீனவர் ஓய்வறை திறந்த எம்.எல்.ஏ

இனையம்புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இனயம் மீனவர் கிராமத்தில் அன்பியம் 29- பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கி மீனவர் ஓய்வறை அமைக்கப்பட்டது.  இதை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் நேற்று திறந்து வைத்தார். இனயம் ஊராட்சி பணியாளர் பிபியான்ஸ் அர்ச்சித்தார். உடன்...