Google search engine

கருங்கல்:   கோவிலில் மீண்டும் உண்டியல் திருட்டு

கருங்கல் அருகே பால விளையில் பத்ரேஸ்வரி அம்மன், இசக்கியம்மன் மற்றும் சிவன் கோயில்கள் அமைந்துள்ளன. வழக்கம்போல் கோயில் நிர்வாகிகள் நேற்று வந்து பார்த்தபோது இசக்கியம்மன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.  ஏற்கனவே இந்த கோயில் வளாகத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு முகமூடி அணிந்த திருடன்...

திக்கணங்கோடு கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கோரிக்கை

திக்கணங்கோடு கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கேட்டு அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகளுடன் சென்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து திக்கணங்கோடு கால்வாய் தண்ணீரைப் பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி திக்கணங்கோடு கால்வாயில் சைப்பன் முதல்...

தக்கலை: பழக்கடையில் பூட்டை உடைத்துக் கொள்ளை

தக்கலை அருகே உள்ள இரணியல் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதன் அருகே பார் அமைந்துள்ள பகுதியில் பழக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 10 மணி வரை அந்த கடையில் வியாபாரம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு கடை மூடப்பட்டது. இன்று 24-ம் தேதி காலை...

குளச்சல்: போலி நகை அடகு வைத்து மோசடி.. 2 பேர் கைது

மண்டைக்காடு அருகே  கருமங்குடல் பகுதியை சேர்ந்தவர் ஜான் வில்சன் (65). இவர் குளச்சல் சன்னதி தெருவில் ஒரு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நிறுவனத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி குளச்சல் பூலான் விளையை சேர்ந்த மீன் சுமை தூக்கும் தொடிலாளி கிருஷ்ணன் (42) என்பவர்...

மார்த்தாண்டம்: பழைய வாகனங்கள் பிரிக்கும் கடையில் திருட்டு

மார்த்தாண்டம் அருகே கோணங்காடு பகுதி சேர்ந்தவர் வின்சென்ட் (45). இவர் காஞ்சிர கோடு பகுதியில் பழைய வாகனங்களை பிரித்து விற்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையில் புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த 800 கிலோ எடை உடைய பழைய பேட்டரிகள், வாகனங்களை பிரிக்க...

மார்த்தாண்டம்: கடையில் பேட்டரிகள் திருடிய 3 பேர் கைது

மார்த்தாண்டம் அருகே சிராயன் குழி பகுதியில் வின்சென்ட் ராஜ் என்பவர் பழைய வாகனங்களை வாங்கி பிரிக்கும் கடை நடத்தி வந்தார். சம்பவ தினம் இரவு நள்ளிரவில் கடையில் புகுந்த மர்ம நபர்கள் 51 பழைய பேட்டரிகளையும், வாகனங்களை பிரிக்க பயன்படுத்தும் கருவிகளையும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வின்சென்ட்...

திக்கணங்கோடு: கால்வாய் சீரமைக்க கலெக்டரிடம் எம்எல்ஏக்கள் மனு

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட திக்கணங்கோடு பாசன கால்வாய் மூலம்  நூற்றுக்கு மேற்பட்ட பாசன குளங்கள் பயன்பெற்று வருகிறது. தற்போது இந்த கால்வாய் சீரமைப்பு பணிகள் பல்லாண்டுகளாக மேற்கொள்ளாத காரணத்தால்  கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாத வகையில் காணப்படுகிறது. இது தொடர்பாக பொது மக்களின் புகாரின் பேரில்  ராஜேஷ்குமார் எம்எல்ஏ...

கருங்கல்: பைக் – கார் மோதி விபத்து தொழிலாளி உயிரிழப்பு

கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (41) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். மகள் ஏழாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் மகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக சுரேஷ்...

நாகர்கோவில்: வாலிபரை கத்தியால் வெட்டியதாக 2 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலச்சூரங்குடியைச் சேர்ந்தவர் விஜய்(26). இவர் அவரது நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது முன்விரோதம் காரணமாக ரமேஷ் மற்றும் இரண்டு பேர் அங்கு வந்து அவரை கத்தியால் வெட்டி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த விஜய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசாரிப்பள்ளம் போலீசார் இது தொடர்பாக...

நாகர்கோவிலில் லாட்டரி, மது விற்ற 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று கனகமூலம் சந்தை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கேரள லாட்டரி விற்றதாக திலகர் தெருவை சேர்ந்த கோபகுமார் (வயது 51) என்பவரை கைது செய்து 7 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல கோட்டார் போலீசார் வட்டவிளை...