நாகர்கோவிலில் ரூ. 7.20 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 10-வது வார்டு நெசவாளர் காலனி அரசு தொடக்கப்பள்ளியில் ரூ. 2.20 லட்சத்தில் சீரமைப்பு மற்றும் 11-வது வார்டு பரதர் தெரு மற்றும் புளியடி பகுதியில் உள்ள கழிவறையை ரூ. 5 லட்சத்தில் சீரமைப்பு ஆகிய பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது....
அருமனை: ஆசிட் குடித்து பலியான வாலிபர்
அருமனை அருகே தோட்டப் பாறவிளை என்ற இடத்தைச் சேர்ந்தவர் அஜித் (30). தொழிலாளி. இவருக்குத் திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மனைவி தனது குழந்தையுடன் அஜித்தைப் பிரிந்து சென்று விட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த...
மண்டைக்காடு: பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர், ஜாக்குலின் சுபிதா (27). இவருக்கும் மண்டைக்காடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆல்வின் என்பவருக்கும் கடந்த 22-01-2024 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 15 பவுன் நகைகள், ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ரூ. 2...
அருமனை: கொத்தனார் மயங்கி விழுந்து பலி
அருமனை அருகே செறியகொல்லா பகுதியை சேர்ந்தவர் ரோபின் (46) கொத்தனார். இவர் நேற்று காலை பிறகு சேகரிப்பதற்காக மாங்கோடு பகுதிக்கு வந்தார். அங்கு விறகு சேகரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென சுருண்டு மயங்கி விழுந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே ரோபினை மீட்டு சிகிச்சைக்காக காரக்கோணம் மருத்துவக்...
குழித்துறை: ஆற்றில் இறந்த குடும்பத்துக்கு நிவாரணம்
குழித்துறையை சேர்ந்தவர் பீட்டர் ஜான்சன். இவர் 01.06.2025 அன்று சுமார் காலை 11.30 மணியளவில் குழித்துறை ஆற்று தடுப்பணையில் குளிக்கச் சென்றார். அப்போது தடுப்பணையில் மனோ (17) மற்றும் சிறுவன் அகிலேஸ் (12) ஆகிய இருவரும் நடந்து வந்துகொண்டிருக்கும்போது தவறி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்தனர்.
இதைக் கண்ட பீட்டர்...
மார்த்தாண்டம்: பஸ் நிலையத்தில் பஸ்கள் செல்ல நடவடிக்கை
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு பஸ்கள் மார்த்தாண்டம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லாமல் இருந்து வந்தது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் கடந்த தினம் குமரிக்கு வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது நகராட்சி...
கிள்ளியூர்: திமுக சார்பில் கருணாநிதி பிறந்த தினக் கொண்டாட்டம்
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கருணாநிதி 102 வது பிறந்தநாள் விழா இன்று கருங்கல் அருகே பாலூர் ரவுண்டானாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் பி கோபால் தலைமை வகித்தார்.
கிள்ளியூர் பேரூர் செயலாளர் சத்யராஜ், ஒன்றிய அவை தலைவர் பாலூர்...
கொல்லங்கோடு: வங்கி ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி
கொல்லங்கோடு காவல் நிலையம் அருகில் கனரா வங்கி மற்றும் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து உடைத்துள்ளனர். இது தொடர்பாக தகவல் வங்கியின் டெல்லி தலைமை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் ஏடிஎம்மில் சென்று பார்த்துள்ளனர். அப்போது...
நாகர்கோவிலில் டெம்போ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பட்டகசாலி யன்விளையை சேர்ந்தவர் மதியழகன் (வயது 60), டெம்போ டிரைவர். இவருக்கு வாயில் புண் இருந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டும் குணமாகவில்லை. இதனால் உணவு சாப்பிட முடியாமல் மதியழகன் அவதிப்பட்டார். இது அவருக்கு மனவேதனையை அளித்தது. இந்த நிலையில் மதியழகன் நேற்று...
குமரி: போக்குவரத்து விதிகளை மீறியதாக 3, 421 பேர் மீது வழக்கு
குமரி மாவட்டத்தில் போக்குவரத்துக்கு விதிகளை மீறும்வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்....













