கருங்கல்: போதகர், 2 பெண்கள் மீது தாக்குதல்
கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி முருங்கைவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் தேவ விஜின் (49) இவர் போதகர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மேரி ஸ்டெல்லா (45) என்பவருக்குச் சொந்தமான சொத்தை விலைக்கு வாங்கி, அந்த வீட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இதில் மேரி ஸ்டெல்லா, பள்ளியாடியைச்...
தேங்காப்பட்டணம்: ரமலான் சிறப்பு தொழுகை
ஒரு மாத காலம் நோன்பிருந்த இஸ்லாமியர்கள் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) பிறை தென்பட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தேங்காய்பட்டணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை தலைவர் சல்மான் பாரிஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஹுசைன் ஜவாஹிரி கலந்து...
புதுக்கடை: மது விற்ற பெண் கைது -26 பாட்டில்கள் பறிமுதல்
புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளஸ்சிங் என்பவர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது சாத்தன்பறம்பு என்ற இடத்தில் வேலாயுதன் மனைவி வசந்தா...
தக்கலை: தோட்டத்தில் பேட்டரி திருட்டு ; 2 பேர் கைது
வேர்க்கிளம்பி அருகே உள்ள மாத்திரவிளை பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (62). இவருக்கு அந்த பகுதியில் வாழைத்தோட்டம் உள்ளது. தோட்டத்தை சுற்றி சூரிய ஒளி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பேட்டரி, ரிசீவர், கண்ட்ரோலர் போன்ற மின் சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் அவர் தோட்டத்திற்கு சென்றபோது அங்கிருந்த பேட்டரி, ரிசீவர்,...
ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு
உலக காசநோய் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் காசநோயை முழுமையாக ஒழிக்கவும், பொதுமக்களிடையே காசநோயை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என டீன் ராமலட்சுமி தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
நாகர்கோவில் குடிநீர் குழாய் பள்ளம் மூடாததால் ஆபத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 50, 51, 52 வார்டுகளுக்கு குடிநீர் கொண்டு செல்ல பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி அருகில் தோண்டப்பட்ட குழி முழுமையாக மூடப்படாமல் விடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதில் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் பொது...
குளச்சல்: அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
குளச்சல் இலப்ப விளை அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குளச்சல் நகர்மன்றத் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. காலையில் குருந்தன் கோடு வட்டார மேற்பார்வையாளர் ஜான்சன் அறிவியல் கண்காட்சியை திறந்துவைத்தார். இப்பள்ளி ஆசிரியை பெல்சி பாய் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்....
திருவட்டார்: தொழிலாளியை வெட்டிவருக்கு 3 ஆண்டு சிறை
திருவட்டாறு அருகே உள்ள குட்டைக்குழி பகுதியை சேர்ந்தவர் கபிரியேல் (65). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற விஜயகுமார் (50) இவரும் தொழிலாளி. இவர்களிடையே ரப்பர் மரக்கிளை வெட்டியது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 10-06-2023-ல் குமார் என்ற விஜயகுமார் கபிரியேலை...
திங்கள்சந்தை: கால்வாயில் கவிழ்ந்த மினி டெம்போ
இரணியல் பகுதி வழியாக செல்லும் கால்வாய் தண்ணீர் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் திங்கள்சந்தை அடுத்த புதுவிளை பாலம் அருகே கால்வாய் கரையில் தடுப்பு சுவர் கட்டப்படாமல் உள்ளது. இதனால் அடிக்கடி சிறுவர்கள், பொதுமக்கள், வாகனங்கள் கால்வாயில் தவறி விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
எனவே கால்வாய்...
கீழ்குளம்: அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி
கீழ்குளம் மேற்கு அரசு தொடக்கப் பள்ளியில் இன்று காலை மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் பி. கோபால் தலைமை வகித்தார். கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஏஞ்சலின் பிரைட், ஜோஸ்பின்,...













