ஒரு மாத காலம் நோன்பிருந்த இஸ்லாமியர்கள் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) பிறை தென்பட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தேங்காய்பட்டணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை தலைவர் சல்மான் பாரிஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஹுசைன் ஜவாஹிரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் கிளை செயலாளர் அனீஸ், பொருளாளர் ஆசிக் ரகுமான், துணைத் தலைவர் நவாஃப், துணைச் செயலாளர் அன்சாரி, வர்த்தக அணி செயலாளர் அசன் மற்றும் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கூட்டு ரமலான் தொழுகையில் ஈடுபட்டனர்.
மேலும் ஒருவருக்கொருவர் ஆறத் தழுவி தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் களியக்காவிளை, இரவிபுதூர்கடை, திருவிதாங்கோடு, குளச்சல், திங்கள் நகர், குலசேகரம், கடையாலுமூடு, ஆளூர், தக்கலை, நாகர்கோவில், கோட்டார், மந்தாரம்புதூர், பஞ்சலிங்கபுரம், கன்னியாகுமரி, பண்ணையூர், மாதவலாயம், திட்டுவிளை என பதினெட்டு இடங்களில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.