பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அனைத்து சமூக வலைதள சேவையும் சுமார் ஆறு நாட்களுக்கு தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13 முதல் 18-ம் தேதி வரையில் அங்கு இந்த தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
பஞ்சாப் மாகாண முதல்வர் மர்யம் நவாஸ் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, மத்திய அரசிடம்...
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி. இந்நிலையில், இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என அக்கட்சியை சேர்ந்தவரும், பிரதமருமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் லேபர் கட்சி ஆட்சி அமைக்கிறது.
தோல்வி குறித்து ரிஷி சுனக், “தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நான் கீர் ஸ்டார்மரை தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு எனது வாழ்த்தினை தெரிவித்தேன். இன்று ஆட்சி அதிகாரம் அமைதியான முறையில் கைமாறியுள்ளது....
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-க்கான முதல் நேரடி விவாதத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விவாதம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பைடன் செயல்பட்ட விதம் விமர்சனத்துக்குள் ஆனது. இந்தச் சூழலில் அதற்கான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்.
கடந்த வாரம் நடந்த விவாதத்தில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் நேரடி...
மேற்கு கரையில் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பாலஸ்தீனரை இஸ்ரேலிய ராணுவம் ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல் என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக ஹமாஸ் ஆயுதக் குழுக்கள் மீது...
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாரன்ஸ் வான் என்ற பெண் கடந்த1993-ம் ஆண்டு டெலிகாம் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.பகுதி பக்கவாதம் மற்றும் வலிப்புநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஏற்ற பணி தொடக்கத்தில் வழங்கப்பட்டது.
கடந்த 2002-ம் ஆண்டு, வேறுபகுதிக்கு பணியிடம் மாற்றம் பெற்று சென்றார். அங்கு அவருக்குஏற்ப வேலை வழங்கவில்லை. இதனிடையே 2013-ல் இந்நிறுவனம் ஆரஞ்ச் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லாரன்ஸ்வானுக்கு எந்த பணியையும் வழங்கவில்லை. இது தொடர்பாக வாசன்ஹோவ் நீதிமன்றத்தில்...
ரஷ்யாவின் வடக்கு காக்கஸ் பிராந்தியத்தில் டகேஸ்டான் மாகாணத்தில் இரு நகரங்களில் தேவாலயம், மற்றும் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஒரு காவல் சோதனைச் சாவடியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு மத குரு, 15 போலீஸார், பொதுமக்கள் உள்பட பலர் உயிரிழந்ததாக அப்பிராந்திய ஆளுநர் செர்கய் மெலிகோவ் தெரிவித்துள்ளார்.
டகேஸ்டான் மாகாணத்தில் மிகப் பெரிய நகரான மகாச்கலா மற்றும் கடற்கரை நகரான டெர்பன்ட்டில்...
2018-ம் ஆண்டு காஷ்மீர் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற பிரிகேடியர் சுட்டுக் கொலை
admin - 0
காஷ்மீரில் உள்ள சுன்ஜ்வான் ராணுவ முகாம் மீது கடந்த 2018-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர், 12-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர், பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய பிரிகேடியர் அமிர் ஹம்சா. இவர் பாகிஸ்தான் உளவுப்பிரிவு (ஐஎஸ்ஐ) நடவடிக்கைகளை திட்டமிடும் பிரிவில் பணியாற்றினார். பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் இவர் எமர்ஜென்சி சர்வீசஸ்...
அடுக்குமாடி தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.12.5 லட்சம் நிவாரணம்: குவைத் அரசு முடிவு
admin - 0
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயில் இறந்ததொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.12.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று குவைத் அரசு அறிவித்துள்ளது.
குவைத் நாட்டின் மங்கப் பகுதியில் 7 மாடி கட்டிடம் ஒன்றில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அந்தக்கட்டிடத்தின் தரைதளத்தில் பாதுகாவலர் அறையில் கடந்த 12-ம் தேதி மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது. அதிகாலை என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்....
அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் பேங்க் என இந்தியாவில் இந்துஜா குழுமம் ஆட்டோமொபைல், வங்கி, ஐடி, சுகாதாரம், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் என பல துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர்.
இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால்,அவரது மகன் அஜெய் மற்றும் அவரது மனைவி நம்ரதா சுவிட்சர்லாந்தில் வசிக்கின்றனர்.
இவர்கள் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணியமர்த்தி வருவதாகவும், அவர்களுக்கு குறைந்த ஊதியம்...
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இதன் விவரங்கள் குறித்து ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ரஷ்யா தற்போது 4,380 அணு ஆயுதங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 3,708 அணு ஆயுதங்கள் உள்ளன. உலக நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்களில் 90 சதவீதம் இந்த இரு...










