ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இல்லம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில் அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: ரஷ்ய அதிபரின் இல்லம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வரும் செய்திகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது நடந்துகொண்டிருக்கும் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை அடைவதற்கான மிக சாத்தியமான வழிமுறை ராஜதந்திர முயற்சிகள்...
ரஷ்யா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிறிஸ்துமஸ் மற்றும் 2026 புத்தாண்டு ஆகியவற்றுக்காக இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு அதிபர் புதின் தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, காமன்வெல்த் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்துகளை தெரிவித்துள்ள அதே வேளையில் மாஸ்கோவுக்கு எதிரான உக்ரைன் போரில் மறைமுகமாக ஈடுபடும் ஐரோப்பிய நாடுகளை அவர் வாழ்த்துப் பட்டியலில்...
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு இஸ்ரேல் அமைதி விருது: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு
admin - 0
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு இஸ்ரேலின் உயரிய குடிமகன் விருதான இஸ்ரேல் அமைதி விருது வழங்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
புளோரிடாவில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “இஸ்ரேல் அமைதி விருதை அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலிய மற்றும் யூத மக்களுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக இந்த...
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (80) நேற்று காலமானார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேற்குவங்கத்தின் ஜல்பைகுரியில் கடந்த 1945-ம் ஆண்டில் கலீதா பிறந்தார்.
கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உதயமாகின. அப்போது கலீதாவின் குடும்பம் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட தினஜ்பூரில் குடியேறியது. கடந்த 1960-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ கேப்டன் ஜியாவூர் ரஹ்மானை, கலிதா திருமணம் செய்தார். அப்போது அவருக்கு 15 வயது.
கடந்த 1975 -ம்...
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகொலையை தொடர்ந்து இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது.
இதில் மைமன்சிங் பகுதியில் கடந்த 18-ம் தேதி தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து அம்ரித் மோண்டல் என்ற இந்து இளைஞர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்து சமூகத்தை சேர்ந்த பஜேந்திர பிஸ்வாஸ் (42) என்பவர் நேற்று முன்தினம் சக ஊழியர் நோமன்...
அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைனும், ரஷ்யாவும் நெருங்கியுள்ளன. இது சிக்கலானதாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று புளோரிடாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார். அதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், அதிபர் ட்ரம்ப் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரண்டரை மணி நேரம் போனில் பேசினார்.
இரு தலைவர்களுடனும் பேசிய...
வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அனைத்து இந்திய ஷியா தனிச் சட்ட வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அனைத்து இந்திய ஷியா தனிச் சட்ட வாரியத்தின் (ஏஐஎஸ்பிஎல்பி) வருடாந்திர கூட்டம் லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் ஏஐஎஸ்பிஎல்பி பொதுச் செயலாளர் மவுலானா யசூப் அப்பாஸ் கூறியதாவது: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டித்தது.
மேலும், அப்பாவி மனிதர்கள் யாரையும் கொல்வதை...
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா இன்று (டிச. 30) அதிகாலை காலமானார். நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டாக்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்ததாக அவரது கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கலீதா ஜியா, கல்லீரல்...
வங்கதேசத்தில் பிரோஜ்பூர் பகுதியில் 5 இந்து குடும்பங்களின் வீடுகள் நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்டன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன் பிறகு அந்த நாட்டில் வசிக்கும் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை சுமார் 2,500-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. சுமார் 150-க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு உள்ளன. சுமார் 25 இந்துக்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் வங்கதேச மாணவர் அமைப்பின்...
இந்தோனேசியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 முதியவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வடக்கு சுலவேசி காவல் துறை செய்தித் தொடர்பாளர் அலாம்சியா ஹசிபுவான் நேற்று கூறியதாவது: இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 16 முதியவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். உயிர்பிழைத்த...