வங்கதேசத்தில் மர்ம கும்பல் தாக்கியதில் இந்து மதத்தை சேர்ந்த 3-வது நபர் நேற்று உயிரிழந்தார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால நிர்வாகம் பொறுப்பேற்றது. அதன்பிறகு கடந்த மாதம் மாணவர்கள் மீண்டும் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து இந்துக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. கடந்த மாதம் மட்டும் 2 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
கடந்த டிசம்பர் 18-ம்...
மீன் சாப்பிடுவதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை அதில் இருக்கும் முள்தான். அதனால் மீனை சாப்பிடும் போது அதிக கவனம் தேவைப்படும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மரமணு மாற்றம் மூலம் முள் இல்லாத மீன் வகையை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
‘கிபல் கார்ப்’ என்ற நன்னீர் மீன் வகையை சீன விஞ்ஞானிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். இதில் வழக்கமாக ஆங்கில எழுத்து ‘ஒய்’ வடிவில் 80 சிறிய முள்கள் இருக்கும்....
சீனாவின் டேங்க் மேன் போன்று ஈரான் ராணுவத்தை தனி ஒருவனாக எதிர்த்த ஜென் இசட் இளைஞரின் வீடியோ, புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.
சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கடந்த 1989-ம் ஆண்டில் மாணவர்கள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினர். கடந்த 1989 ஜூனில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் குவிந்த மாணவர்களை சீன ராணுவம் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. இதில்...
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்-கை இடைக்கால அதிபராக பொறுப்பேற்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்குவதாகவும், அங்கிருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் ஏராளமாக நுழைவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். வெனிசுலாவுக்கு பொருளாதார தடை விதித்தார்.
மேலும், போதைப் பொருள்...
நியூயார்க் சிறையில் வெனிசுலா அதிபர்: போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு
admin - 0
வெனிசுலாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் நகரில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது போதைப் பொருள் கடத்தியதாகவும், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் மீது அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படையினர் நேற்று முன்தினம் அதிகாலையில் தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ (63) மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படையினர் சிறைபிடித்தனர். பின்னர்,...
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயரானார் என்ற வரலாறு படைத்த ஜோரான் மம்தானி, இன்று குர்ஆன் சாட்சியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு சரித்திரத்தில் இன்னொரு புதிய பக்கத்தை சேர்த்துள்ளார்.
யார் இந்த ஜோரான் மம்தானி? - நீங்கள் ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்கள், ‘ஸோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ போன்ற ஆவணப்படம் பற்றி அறிந்திருந்திருந்தால், அதனை இயக்கிய மீரா நாயரையும் தெரிந்திருக்கும். அந்த பிரபல இயக்குநர்...
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பார் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சுவிட்சர்லாந்து தலைநகரான பெர்னில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனிச்சறுக்கு நகரமான கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள கான்ஸ்டெல்லேஷன் என்ற பாரில் நள்ளிரவு 1.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு 100-க்கும் மேற்பட்டோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்துள்ளனர்.
பட்டாசு...
“எனது தாய் எவ்வாறு நாட்டு மக்களுக்காக பாடுபட்டாரோ நானும், அவர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து மக்களுக்கான எனது பணியை தொடங்குவேன் என்று வங்கதேசத்தின் மறைந்த தலைவர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசிய கட்சியின் தலைவராக இருந்தவருமான கலீதா ஜியா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல், அவரது கணவரான ஜியாவுர் ரஹ்மானின் நினைவிடத்துக்கு...
இந்தியா, பாகிஸ்தானில் செயல்படும் அணு மின் நிலையங்களின் பட்டியலை இரு நாடுகளும் நேற்று பரிமாறிக் கொண்டன.
அணு மின் நிலையங்கள் தொடர்பாக கடந்த 1988-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஒருவரின் அணு மின் நிலையங்களை மற்றவர் தாக்கக்கூடாது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி இரு நாடுகளும் அணு மின் நிலையங்கள் தொடர்பான பட்டியலை பரிமாறிக் கொள்ள வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 1992-ம்...
புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடி விபத்து: சுவிட்சர்லாந்து விடுதியில் 40 பேர் பலி; 100+ காயம்
admin - 0
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புத்தாண்டு தினம் நேற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் நடந்த கொண்டாட்டத்தின்போது வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக தகவல் பரவியது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து சுவிட்சர்லாந்து அதிகாரிகள் கூறியதாவது: கிரேன்ஸ்- மோன்டனா நகராட்சிக்கு உட்பட்ட ஸ்கை ரிசார்ட்டில் உள்ள லீகான்ஸ்டெல்லேஷன் மதுபான மற்றும் ஓய்வு விடுதியில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக 150-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
இசைக்...