Google search engine
ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கிராஸ் நகரில் ஒரு பள்ளியில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அது ஓர் உயர்நிலைப் பள்ளி எனத் தெரிகிறது. திடீரென்று பள்ளியின் ஒரு பகுதியிலிருந்து துப்பாக்கிச்...
காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான மேட்லீனில் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கூறியுள்ளார். அதன்பின், அவர் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை அதிகாலை காசாவை நோக்கிச் சென்றபோது, ​​மேட்லீன் நிவாரணக் கப்பலை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்தன. அது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய கிரேட்டா தன்பர்க், "இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால், நாங்கள் சர்வதேச நீரில்...
இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்​ரோ) ககன்​யான் என்ற திட்​டத்தை 2027-ம் ஆண்டு செயல்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளது. மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்பி அவர்​களை மீண்​டும் பத்​திர​மாக பூமிக்கு அழைத்து வரு​வது​தான் இதன் நோக்​கம். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில்...
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, மோசமான வானிலை காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோசமான வானிலை காரணமாக, ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, ஜூன் 10-ம் தேதியில் இருந்து ஜூன் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி ஓடம் ஜூன் 11-ம்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன. அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக மெக்ஸிகோவை சேர்ந்த 40 லட்சம் பேர் அங்கு சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 7.25...
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப், கலிபோர்னியா ஆளுநர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு இடங்களில் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர்...
அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்க தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு, தொழிலதிபர் எலான் மஸ்க் முழு ஆதரவு அளித்தார். தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இதன்பிறகு அரசு செயல் திறன் என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக எலான் மஸ்க்...
காசாவில் தாய்லாந்து பிணைக் கைதி ஒருவரை இஸ்ரேல் நேற்று மீட்டது. காசாவில் தொடரும் விமான தாக்குதலில் நேற்று 95 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் 251 பேரை பிணைக் கைதிகளாக காசாவுக்கு கொண்டு சென்றனர். இதனால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட போரில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரும், பாலஸ்தீனர்கள் 54,000 பேரும் உயிரிழந்தனர். இன்னும் 55 பிணைக் கைதிகள் பற்றிய தகவலை...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. ஒருவர் புவி அரசியலில் சர்வ வல்லமை பொருந்திய அதிபர், இன்னொருவர் உலகின் பெரும் பணக்காரர். அதிகாரமும் செல்வமும் மோதும்போது அது இருவருக்குமே தோல்வியைத் தராத ‘வின் - வின்’ (win - win) நிலையாகத்தான் செல்லும் என்றாலும் யாருக்கு, யார் அதிக அழுதத்ததைத் தரப் போகிறார்கள் என்று வேடிக்கை பார்க்க...
 ‘டி கிராசே’ என்ற அதி நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடு பிரான்ஸ். இது சமீபத்தில் அறிமுகம் செய்த அணு சக்தி நீர் மூழ்கி கப்பல் ‘டி கிராசே’. பிரான்ஸ் கடற்படையில் ஏற்கெனவே உள்ள ரூபிஸ் வகை நீர்மூழ்கி கப்பல்களை 2030-ம் ஆண்டுக்குள் மாற்றும் வகையில் 10 பில்லியன்...