Google search engine
பிரிட்டனில் சாலை விபத்தில் சிக்கியதால் கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இருந்த சவுதி இளவரசர் அல்வாலீத் நேற்று முன்தினம் காலமானார். சவுதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் தலால் மகன் அல்வாலீத் பின் காலித் பின் தலால். பிரிட்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்து வந்த அல்வாலீத், கடந்த 2005-ம் ஆண்டு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் கோமா நிலைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ரியாத்தில்...
விபத்தில் சிக்கியதால் 20 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் அல்வலீத் பின் காலித் காலமானார். அவருக்கு வயது 36. 2005ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராணுவ அகாடமியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு மோசமான கார் விபத்தில் சிக்கினார் இளவரசர் அல்வலீத். அப்போது முதல் அவர் கோமாவில் இருந்து வந்தார். அறுவை சிகிச்சையின் போது, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவரை...
கவின்-பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் படத்தை கென் ராய்சன் இயக்குகிறார். ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் சார்பில் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். ஓஃப்ரோ இசையமைக்கிறார். இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என படக் குழு தெரிவித்துள்ளது.
ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நலன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஆர்ஐசி என்ற முறையை அமைத்திருந்தன. கரோனா பரவல் காரணமாகவும், கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவும் ஆர்ஐசி முறையின் செயல்பாடு தடைபட்டது. தற்போது இந்தியா - சீனா இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை...
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் 4 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. இந்நிலையில் இந்த டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க அரசு நேற்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ...
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அறிவித்தது அமெரிக்க அரசு. இதனை இந்தியா வரவேற்றது. இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு பகிர்ந்துள்ள தகவல் குறித்து பார்ப்போம். ”பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்த அமைப்பு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட மற்றும்...
இ​ராக்​கில் வணிக வளாகத்​தில் ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி 61 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்து குறித்து விசா​ரணை நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. கிழக்கு இராக்​கின் வசிட் மாகாணம் குட் நகரில் ஒரு வாரத்​துக்கு முன்பு ஒரு புதிய வணிக வளாகம் திறக்​கப்​பட்​டது. 5 தளங்​களைக் கொண்ட அதில் உணவகம், சூப்​பர் மார்க்​கெட் உள்​ளிட்​டவை இயங்கி வரு​கின்​றன. இந்​நிலை​யில், புதன்​கிழமை இரவு அந்த வணிக வளாகத்​தில் தீ விபத்து ஏற்​பட்​டது. இதையடுத்து...
 ​பாகிஸ்​தானில் மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் 150-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். பாகிஸ்​தானில் பஞ்​சாப், கைபர் பக்​துன்​வா, ஜில்​ஜிட்​-​பால்​டிஸ்​தான் உள்​ளிட்ட பகு​தி​களில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. தலைநகர் இஸ்​லா​மா​பாத், ராணுவ தலை​மையக​மான ராவல்​பிண்டி உட்பட பல்​வேறு நகரங்​கள், கிராமங்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி உள்​ளன.ஜீலம், சிந்​து, சட்​லஜ், ஜில்​ஜிட், ஸ்வாட் உள்​ளிட்ட நதி​களில் வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடு​கிறது. கனமழை காரண​மாக பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாகாணம் முழு​வதும்...
கம்​போடியா அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஆன்​லைன் மோசடிகள் தொடர்பாக ஐந்து மாகாணங்​களில் தீவிர சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், 1,000-க்​கும் மேற்​பட்டோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதில், 200-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் வியட்​நாம் நாட்டை சேர்ந்​தவர்​கள். 27 பேர் சீனர்​கள், 75 பேர் தைவானை சேர்ந்​தவர்​கள். உள்​நாட்​டைச் சேர்ந்த 85 பேரும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களிட​மிருந்து கணினிகள், மொபைல்​போன்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கணுக்கால் பகுதியில் வீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது குறித்த அப்டேட்டை வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு இப்போது 79 வயது ஆகிறது. அண்மையில் அவர் பங்கேற்ற நிகழ்வின்போது அவரது கணுக்கால் பகுதியில் வீக்கம் இருந்ததும், கையில் ரத்தக்கட்டு போன்ற காயம் இருந்ததும் கவனத்துக்கு வந்தது. அதை மறைக்கும் வகையில் ஒப்பனை செய்திருந்தார் ட்ரம்ப். இதனால்...