பாகிஸ்​தானில் பலுசிஸ்​தான் விடு​தலைப் ​படையைச் (பிஎல்ஏ) சேர்ந்த பெண் தீவிர​வா​தி​கள் இரு​வர் தற்​கொலைப் படை தாக்​குதல் நடத்​தி​யுள்​ளனர். இங்கு கடந்த சில நாட்​களாக நடை​பெற்ற மோதலில் பாகிஸ்​தான் வீரர்​கள் 200 பேர் உயி​ரிழந்​த​தாக பிஎல்ஏ தெரி​வித்​துள்​ளது. பாகிஸ்​தானில் உள்ள பலுசிஸ்​தான் மாகாணத்​தில் தன்​னாட்சி கோரி பிரி​வினை​ வா​தி​கள் போராடி வரு​கின்​றனர். இதனால் அங்கு பலுசிஸ்​தான் விடு​தலைப் படை​யினருக்​கும், பாகிஸ்​தான் பாது​காப்பு படை​யினருக்​கும் இடையே நீண்​ட​கால​மாக மோதல் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் பலுசிஸ்​தானில்...
இசைத் துறை​யில் சாதனை படைப்​பவர்​களுக்கு அமெரிக்க ரிக்​கார்​டிங் அகாடமி கிராமி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வரு​கிறது. திபெத் ஆன்​மிக தலை​வர் தலாய்​ லா​மா​வின்​(90) உரைகள், கதைகள், தியானங்​கள் ஆகியவை தொகுக்​கப்​பட்டு ஆடியோ புத்தக​மாக வெளி​யாகி​யுள்​ளது. சிறந்த ஆடியோ புத்​தகம் பிரிவில், தலாய்​ லா​மா​வின் உரைகள் அடங்​கிய ஆடியோ தேர்வு செய்யப்பட்​டது. அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் நேற்று முன்​தினம் நடைபெற்ற 68-ம் ஆண்டு கிராமி விருது விழா​வில் தலாய்லாமாவுக்கு கிராமி விருது...
‘விக்கி லீக்ஸ்’, ‘பனாமா லீக்ஸ்’ என்று இந்த உலகம் பல்வேறு ஆவணக் கசிவுகளைக் கண்டுள்ளது. அவையெல்லாம் அரசியல், சொத்து விவரங்கள் தொடர்பானதாகவே இருந்துள்ளன. ஆனால், ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ அல்லது ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ என்ற ஆவணம் அமெரிக்காவின் முன்னாள், இந்நாள் அதிபர்கள், அரசியல் புள்ளிகள், பிரிட்டன் இளவரசர், டெக் ஜாம்பவான்கள் எனப் பலரின் பெயரையும் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது. தங்களின் சமூக அந்தஸ்தையும், அதற்குத் தேவையான தார்மிக ஒழுக்கத்தையும் தாண்டி, கடத்தி பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட...
ரஷ்ய செய்​தித் தொடர்​பாளர் டிமிட்ரி பெஸ்​கோவ் மாஸ்​கோ​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, “ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் கொள்​முதலை நிறுத்​து​வது தொடர்​பாக இந்​திய அரசிட​மிருந்து எங்​களுக்கு எந்த தகவலும் வரவில்​லை. இந்​தி​யா​வுட​னான உறவை அனைத்து நிலைகளி​லும் தொடர்ந்து மேம்​படுத்​தவே ரஷ்யா விரும்​பு​கிறது" என்​றார். ரஷ்ய எரிசக்தி அமைச்சக வட்​டாரங்​கள் கூறுகை​யில், "இந்​திய எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிறு​வனங்​களிட​மிருந்து ஒப்​பந்​தங்​களை ரத்து செய்​வது தொடர்​பான எந்​தவொரு அறி​விப்​பும் இது​வரை வெளி​யாக​வில்​லை" என்று தெரி​வித்​தன.
காங்கோ நாட்​டில் ஏற்​பட்ட சுரங்க விபத்​தில் 200-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். பலர் காயமடைந்​துள்​ளனர். ஏராள​மானோரை காண​வில்​லை. ஆப்​பிரிக்க கண்​டத்​தின் மத்​திய பகு​தி​யில் உள்ள காங்கோ நாட்டில் சுமார் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக உள்​நாட்​டுப் போர் நீடித்து வரு​கிறது. சுமார் 120-க்​கும் மேற்​பட்ட கிளர்ச்​சிக் குழுக்​கள் காங்​கோ​வின் பல்​வேறு பகு​தி​களை தங்​கள் கட்​டுப்​பாட்​டின் கீழ் வைத்​துள்​ளன. காங்​கோ​வின் வடக்​குப் பகு​தி​யில் எம்23 என்ற கிளர்ச்​சிக் குழு செயல்​படு​கிறது. இந்த குழு கோமா,...
சீன அதிபர் ஜி ஜின்​பிங் அந்த நாட்​டின் மத்​திய ராணுவ கமிஷனின் (சிஎம்​சி) தலை​வ​ராக செயல்​படு​கிறார். இந்த கமிஷனின் கட்​டுப்​பாட்​டின் கீழ் சீன ராணுவம், கடற்​படை, விமானப்​படை, ஏவு​கணைப் படை ஆகியவை செயல்​படு​கின்​றன. சிஎம்சி அமைப்​பின் துணைத் தலை​வ​ராக ஜாங் யூக்​ஸியா பதவி வகித்து வந்​தார். ஊழல் குற்​றச்​சாட்​டு​களின் ​பேரில் சில நாட்​களுக்கு முன்பு அவர் பதவி நீக்​கம் செய்​யப்​பட்​டார். சிஎம்சி அமைப்​பின் பணி​யாளர் பிரிவு தலை​வ​ராக பணியாற்றிய லீயு...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகளுக்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் சண்டையில் இருதரப்பிலும் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தபோது, பலுசிஸ்தான் பலூச் மன்னரின் கீழ் தனி நாடாக இருந்து வந்தது. அதன் பின்னர், பாகிஸ்தான் அதனை தன்னோடு இணைத்துக்கொண்டது. அது முதல், அங்கு அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் எனும் அமைப்பு,...
அரசு வீட்டு வசதி திட்டத்தில் நிலம் ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 7,200 சதுர அடி கொண்ட இரண்டு மனைகள் ஒதுக்கியதில் விதிகள் மீறப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் ஷேக் ஹசீனா, அவரது மருமகன்...
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு கடந்த ஓர் ஆண்டுகாலமாக சுமுகமானதாக அமையவில்லை. வரி விதிப்பு, வர்த்தக உறவு என பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. இந்த சூழலில் திங்கட்கிழமை (பிப்.2) அன்று இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி உடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்தார்....
தமிழக கோ​யில்​களில் இருந்து கடத்​தப்​பட்ட நடராஜர் வெண்கல சிலை உட்பட 3 சிலைகளை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க அமெரிக்க அருங்​காட்​சி​யகம் ஒப்​புக் கொண்​டுள்​ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் ‘ஸ்​மித்​சோனியன் தேசிய அருங்​காட்​சி​யகம்’ உள்​ளது. இந்த அருங்​காட்​சி​யகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் தமிழகக் கோயில்​களில் இருந்து சட்​ட​விரோத​மாகக் கடத்​தப்​பட்ட 3 வெண்கல சிலைகளை திருப்பி ஒப்​படைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கடந்த 10-ம் நூற்​றாண்டை சேர்ந்த ஷிவா நடராஜர் சிலை, 12-ம் நூற்​றாண்டை சேர்ந்த...