சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக 11 நிபந்தனைகளை புதிதாக விதித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது என எக்ஸ்பிரஸ் டிரிபியூன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாளிதழ் மேலும் கூறியுள்ளதாவது: நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் அதாவது ரூ.8,560 கோடி நிதியுதவி அளிக்க ஐஎம்எப் ஒப்புதல் தெரிவித்தது. ஆனால், இதற்கு இந்தியா...
இந்தியாவில் பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்டத் தலைவரான சைஃபுல்லா காலித், பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.
சைஃபுல்லாவிடம் வெளியே செல்வதை குறைக்குமாறு லஷ்கர் அமைப்பு அவருக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், நேற்று மாட்லி நகரில் உள்ள தனது வீட்டை விட்டு சைஃபுல்லா வெளியே வந்தபோது, சில மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2005ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த...
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்குவதற்காக முக்கிய நட்பு நாடுகளுக்கு 7 எம்.பி.க்கள் கொண்ட குழுக்களை இந்தியா அனுப்பவுள்ள நிலையில், பாகிஸ்தானும் அமைதிக்கான தனது தரப்பு நிலைப்பாட்டை விளக்கும் குழுவை உலக நாடுகளுக்கு அனுப்ப இருக்கிறது.
முன்னதாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் (பிபிபி) பிலாவல் பூட்டோ சர்தாரி, இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீபத்தில் உருவாகியிருக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை விளக்க ஒரு குழுவினை வழிநடத்துவதற்கு...
சர்வதேச அமைதிக்கு வித்திடுவதில் ‘சவுதி மாடல்’ மத்தியஸ்த பங்கு என்ன? – ஒரு பின்புலப் பார்வை
admin - 0
சவுதி அரேபியா என்றவுடன் அதன் எண்ணெய் வளமும், மெக்கா, மதினா போன்ற புனிதத் தலங்களால் அதற்குள்ள மத ரீதியிலான கலாச்சார பின்புலமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், சவுதி அரேபியா சமீப காலமாக சர்வதேச மத்தியஸ்தத்தின் அடையாளமாக மாறிவருகிறது. அவ்வாறாக, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஆழமான, தெளிவான கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வருகிறது.
மத்திய ஆசியாவின், மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் அமைதியை விரும்பும் சவுதி அரேபியா அப்பகுதிகளில் மட்டுமல்லாது உக்ரைன் -...
அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த ஜனவரி...
ஆசிய நாடுகளில் கரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீரடைய பல ஆண்டுகள் ஆனது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு அதனை அரசுகள் கட்டுப்படுத்தின.
இந்நிலையில் ஆசிய நாடுகளில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மக்கள்தொகை...
போலாரி தளத்தில் பாகிஸ்தான் கண்காணிப்பு விமானம் அழிக்கப்பட்டது: முன்னாள் ஏர் மார்ஷல் ஒப்புதல்
admin - 0
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது போலாரி தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு விமானம் அழிக்கப்பட்டதை பாகிஸ்தானின் முன்னாள் ஏர் மார்ஷல் மசூத் அக்தர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது தெரியவந்ததையடுத்து அந்த நாட்டின் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. அதன் பின்னர் புரிந்துணர்வு அடிப்படையில் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது...
அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாக். வெளியுறவு அமைச்சர் விருப்பம்
admin - 0
காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் செனட் உறுப்பினர்களிடையே உரையாற்றிய இஷாக் தர் இதுகுறித்து மேலும் கூறுகையில், “ இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்க அரசியல் செயல்முறை...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரபு நாடுகளுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷராவை அதிபர் ட்ரம்ப் சந்தித்திருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியிருப்பதற்கான பின்னணியை சற்று விரிவாக பார்க்கலாம்.
அதிபர் ட்ரம்பின் இந்த அரபு நாடுகளுக்கான பயணத்தில் அவர் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷராவை சவுதி தலைநகர் ரியாத்தில் சந்தித்தார். கடந்த 25 ஆண்டுகளில் (கால் நூற்றாண்டுகள்) இந்த...
துருக்கியில் வியாழக்கிழமை நடக்கும் உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ளவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
இதனிடையே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் குழுவினர்களின் பெயர்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையில் துணை வெளியுறவு அமைச்சர் மிகேல் கலுசின், துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின்,ரஷ்ய பாதுகாப்பு படைகளின் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். உக்ரைன் உடனான அமைதி பேச்சுவார்த்தை துருக்கி...










