Google search engine
மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கிய​வர்​களுக்கு விஞ்​ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினை​வாக ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான நோபல் பரிசு வென்​றவர்​கள் குறித்த அறி​விப்பு நேற்று முதல் வெளி​யிடப்​படுகிறது. இந்த ஆண்​டுக்​கான மருத்​து​வத்​துக்​கான நோபல் பரிசு அமெரிக்​காவைச் சேர்ந்த மேரி இ பிரன்​கோவ், ஃப்​ரெட் ராம்​ஸ்​டெல் மற்​றும் ஜப்​பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு...
கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நகரமான சிடோர்ஜோவில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளிக் கட்டிடம் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) அன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கினர். இதனை தொடர்ந்து ஒரு வார காலமாக மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில்...
விக்​கிபீடி​யா​வுக்கு போட்​டி​யாக குரோக்​பீடியா என்ற தகவல் களஞ்​சி​யத்தை அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்க் விரை​வில் அறி​முகம் செய்​கிறார். கடந்த 2001-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்ட விக்​கிபீடியா உலகின் தகவல் களஞ்​சி​ய​மாக செயல்​படு​கிறது. விக்​கிமீடியா அறக்​கட்​டளை என்ற தொண்டு நிறு​வனம் விக்​கிபீடி​யாவை நிர்​வகித்து வரு​கிறது. இந்த தளம் சுமார் 300-க்​கும் மேற்​பட்ட மொழிகளில் தகவல்​களை வழங்கி வரு​கிறது. சுமார் 6.5 கோடிக்​கும் மேற்​பட்ட கட்​டுரைகள் இடம்​பெற்​றுள்​ளன. தற்​போது விக்​கிபீடி​யா​வுக்கு போட்​டி​யாக குரோக்​பீடியா என்ற...
ஜப்​பான் நாட்​டின் முதல் பெண் பிரதம​ராக சனே டகைச்சி தேர்ந்​தெடுக்​கப்​படு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஜப்​பான் நாட்​டில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்​டிபி) ஆட்​சி​யில் உள்​ளது. இக்​கட்​சி​யின் தலை​வர் மற்​றும் ஜப்​பான் பிரதமர் ஷிகெரு இஷி​பா, ஓராண்​டுக்​குப் பிறகு பதவி வில​கு​வ​தாக ஏற்​கெனவே அறி​வித்​திருந்​தார். இதற்​கிடை​யில், ஜப்​பான் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்​பான்மை இழந்​தது. இதனால் பிரதமர் பதவியை ஷிகெரு கடந்த மாதம் ராஜி​னாமா செய்​தார். அதனால், ஆளும்...
இஸ்​ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்​டு​வரும் முயற்​சி​யாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச அமைதி திட்​டத்தை அறி​வித்​தார். இதை ஏற்​ப​தாக இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு அறி​வித்​தார். எனினும் ஹமாஸ் அமைதி காத்​த​தால் அதற்கு ட்ரம்ப் 3 நாள் கெடு விதித்​தார். இந்​நிலை​யில் அமை​திக்கு ஹமாஸ் தயா​ராக இருப்​ப​தாக​வும் பிணைக் கைதி​களை விடுவிக்க ஒப்​புக்​கொண்​டுள்​ள​தாக​வும் பிற நிபந்​தனை​கள் சில​வற்றை ஏற்​றுக்​கொண்​டுள்​ள​தாக​வும் ட்ரம்ப் அறி​வித்​தார். மேலும் காசா மீது...
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்கின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரை இஸ்ரேல் கொடியை ஏந்தும் படியும், முத்தமிடும்படியும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கொடுமைப்படுத்தியதாக அவருடன் இருந்த தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் சுமார் 500 செயற்பாட்டர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர். இந்தப் படகுகளில் சில, கடந்த புதன்கிழமை இரவு பாலஸ்தீன...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும். வரிச் சலுகை, உணவு மற்றும் மின்சாரத்திற்கான மானியங்கள் வழங்க வேண்டும் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை முன்வைத்து ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி...
பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​ மக்கள் 38 முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட்​டம் நடத்திவருகின்றனர். இதற்கு ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஏஏசி) தலைமை தாங்​கியது. போராட்டத்தின் 3-வது நாளான நேற்று பேரணி நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து, முசாபராபாத், தத்யா,ரவாலாகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி பகுதிகளில் ராணுவம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டனர். பேரணியைத் தடுக்க போலீஸார் ஏற்படுத்திய தடைகளை தாண்டி மக்கள் பேரணி சென்றனர். அப்போது...
அமெரிக்​கா​வின் நார்த் டெக்​சாஸ் பல்​கலைக்​கழகம், ஸ்டான்​போர்டு பல்​கலைக்​கழக விஞ்​ஞானிகள் இணைந்து இதயம், கல்​லீரல், ரத்த நாளங்​கள் உள்​ளிட்ட மனித உறுப்​பு​களை ஆய்​வகத்​தில் செயற்கையாக உரு​வாக்கி சாதனை படைத்து உள்​ளனர். இதுதொடர்​பான ஆய்​வறிக்கை முன்​னணி மருத்​துவ இதழ்​களில் வெளி​யிடப்​பட்டு உள்​ளது. அந்த ஆய்​வறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆய்​வகத்​தில் ஸ்டெம் செல்​களை பயன்​படுத்தி செயற்கை இதயத்தை உரு​வாக்​கும் ஆராய்ச்​சி​யில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஈடு​பட்டு வரு​கிறோம். இதன்​படி 16 நாட்​களில் எங்​களது ஆய்​வகத்​தில்...
அயலக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் விதித்துள்ள சூழலில், அவர் இதனை தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள சோச்சி நகரில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான நிகழ்வு நடந்தது. இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் புதின் பேசியது: “ரஷ்யாவின் வர்த்தக ரீதியான...