இஸ்ரேல், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நடைபெற்று வந்தது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 20 அம்ச திட்டத்தை முன்வைத்தார்.
இதுதொடர்பாக எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர்...
அசைவ உணவு வழங்கியதால் தந்தை உயிரிழப்பு: கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு
admin - 0
கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்டது.
அதில், 85 வயதான அசோகா ஜெயவீரா என்பவர் பயணம் செய்தார். இவர் தெற்கு கலிபோர்னியாவில் இதயவியல் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்பு செல்ல 15 மணி நேரமாகும். பயணத்தின் போது சைவ உணவு வழங்க வேண்டும் என்று டிக்கெட் முன்பதிவு...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத வகையில் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேபோரா ராஸ் மற்றும் ரோ கண்ணா தலைமையிலான அமெரிக்க எம்.பி.க்கள் 21 பேர் அதிபர் ட்ரம்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக உள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் செமிகண்டக்டர்,...
உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய ஜப்பான், ஆஸி மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் சுசுமு கிடாகவா, மெல்போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் உமர் எம். யாகி ஆகியோர்...
மியான்மரில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சியை விரட்டி விட்டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், பவுர்ணமியை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை மத்திய மியான்மரில் உள்ள சவுங் யூ நகரில் புத்த மதத்தினர் ஏராளமானோர் கூடி விழா கொண்டாடினர். அப்போது புத்த மதத்தினர் கூடியிருந்த பகுதிகளில் ராணுவத்தினர் பாராகிளைடர்...
அக்.10, 2025... இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் நாள். அது, ஏற்கெனவே 7 போர்களை நிறுத்தியதாக முழங்கி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அறிவிக்கப்படுமா என்ற விவாதங்கள் எழுந்து ஓய்ந்துவிட்டன. இந்நிலையில், ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த முறை கிடைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக சில தரப்பும், அப்படி நடந்தால் அது அந்தப் பரிசுக்கே அவமதிப்பு என்று சிலரும் இப்போது கருத்து...
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவ நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு விவரங்களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று வெளியிட்டது. அமெரிக்காவை சேர்ந்த ஜான்...
இஸ்ரேல் – ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார் ட்ரம்ப்
admin - 0
இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டுள்ளகாசா மீண்டும் கட்டி எழுப்பப்படும். அந்த பகுதியில் இருந்து தீவிரவாதம்...
மருத்துவத்துக்கான நோபல் பரிசு, நோய் எதிர்ப்புத் தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வெல்பவர்கள் குறித்த அறிவிப்பு...
15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 உதவியாளர்களுடன் தனி விமானத்தில் அமீரகம் சென்ற ஆப்பிரிக்க அரசரின் வீடியோ வைரல்
admin - 0
ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள எஸ்வாட்டினி நாட்டின் அரச பரம்பரையில் வந்தவர் மெஸ்வாட்டி-3. பரம்பரை வழி அரசரான மெஸ்வாட்டி, கடந்த ஜூலை மாதம் தனது 15 மனைவிகள், 100 உதவியாளர்கள் புடைசூழ தனி விமானத்தில் அபுதாபியில் வந்திறங்கினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது அரசராக உள்ள மெஸ்வாட்டியின் தந்தை சோபுசா-2-வுக்கு 125 மனைவிகள் என்ற விஷயமும் தற்போது தெரியவந்துள்ளது.
15 மனைவிகளுடன் அரசர் மெஸ்வாட்டி வந்திறங்கிய வீடியோ...










