ஒரே இரவில் 367 ட்ரோன்களை ஏவி உக்ரைன் முழுவதும் மிகப்பெரிய வான்வழித்தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போரில் நடந்திருக்கும் மிகப்பெரிய வான்வழித்தாக்குதல் இதுவாகும்.
ரஷ்யாவின் வான்வழித்தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். கீவ், கார்கிவ், மைக்கோலைவ், டெர்னோபில் மற்றும் கிமெல்னிட்ஸ்கி என பரவலான அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனிடையே உக்ரைன் விமானப்படை 267 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை...
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியலில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று நான் நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் தெரிவித்து வருகிறேன். அவை இந்தியாவிலோ அல்லது வேறு...
மாஸ்கோ மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: கனிமொழி குழு சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கம்
admin - 0
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் ராணுவம், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக கனிமொழி தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவினரின் விமானம் மாஸ்கோவில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. 45 நிமிடங்களுக்கு பிறகு அவர்களின் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளிடம் ஆதாரத்துடன் எடுத்துரைக்க சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்டோர் தலைமையில் 7 எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டு...
இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவப்படையினர் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இரு நாடுகளிடையே போர் நடைபெற்றது. அதன்பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த...
வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர்-உஸ்-ஜமான் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் மீண்டும் வெடித்தால் வங்கதேசத்தில் மீண்டும் கலவர சூழல் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, தேசிய குடிமக்கள் கட்சியின் (என்சிபி) ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாம், முகமது யூனுஸை ஜமுனாவில் உள்ள...
ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்து அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் அங்கு பயிலும் 800-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு நிலை கேள்விக்குறியானது. இந்த சூழலில் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியது ஹாவர்டு பல்கலைக்கழக நிர்வாகம். இது சட்ட மீறல்...
உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த தயார்: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேசிய ரஷ்ய அதிபர் புதின் தகவல்
admin - 0
உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் 2 மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. இதற்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இப்போரை நிறுத்த உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு தரப்புக்கும் அழுத்தம்...
அமெரிக்காவை பாதுகாக்க ரூ.15 லட்சம் கோடியில் ‘கோல்டன் டோம்’ ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
admin - 0
அமெரிக்காவை ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்க " கோல்டன் டோம்" திட்டம் 175 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம் கோடி) மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளை மாளிகையில் கூறியதாவது: வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் நோக்கில் " கோல்டன் டோம்" திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய ஏவுகணை பாதுகாப்பு திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக சுமார்...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில் ’‘ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் எனது இரண்டு மணி நேர உரையாடலை நிறைவு செய்தேன். அது மிகவும் சிறப்பாக நடந்தது என நான்...
காசாவில் இஸ்ரேலின் புதிய வான்வழி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 146 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். சுமார் 250 இஸ்ரேலியர்களை பணய கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் தீவிரவாதிகள் மீது போர் தொடுத்த இஸ்ரேல் காசாவில்...









