பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேற்று தொலைபேசியில் 40 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்தும், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது குறித்தும் இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள்...
அமெரிக்காவின் தடையை மீறி சீன எரிவாயு கப்பல் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றது. இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதப்படுகிறது.
ஈரானை ஒட்டி அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் இரு முனைகளிலும் சரக்கு, எண்ணெய் கப்பல் போக்குவரத்தை அமெரிக்க கடற்படை முடக்கி உள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவின் தடையை மீறி சீனாவின் ரிச்ஸ்டாரி என்ற எரிவாயு கப்பல் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது. இதில் 2.5 லட்சம் பேரல் மெத்தனால்...
பாகிஸ்தான் மருத்துவமனையில் ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று
admin - 0
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் தவுன்சா நகரில் அரசு வட்டார மருத்துவமனை உள்ளது. இதில் ‘பிபிசி நியூஸ்' நடத்திய ஒரு ரகசிய ஆய்வில் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், ஒரே மருத்துவ சாதனத்தை பல நோயாளிகளுக்கு பயன்படுத்துதல் என பல்வேறு பாதுகாப்பற்ற நடைமுறைகளை அம்பலப்படுத்தியுள்ளது. இதுவே எச்ஐவி பரவலுக்கும் வழிவகுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தவுன்சாவில் 8 வயது சிறுவன் எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தான். இறுதி நாட்களில்,...
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று சவுதி அரேபியா வலியுறுத்தி வருகிறது. கடந்த 11-ம் தேதி அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்த சூழலில் ஈரானை ஒட்டி அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் இருபுறத்திலும் சரக்கு, எண்ணெய் கப்பல் போக்குவரத்தை அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் முடக்கியது. ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் எந்தவொரு கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல முடியாது...
இரண்டு வார கால போர்நிறுத்தம் என்ற அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு உலகம் முழுவதும் மிகப் பெரிய நிம்மதியைக் கடத்தியது. அடுத்ததாக அமைதிப் பேச்சுவார்த்தை என்ற அறிவிப்பு, கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
“இனி, ஈரான் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும், வராவிட்டாலும் எனக்குக் கவலையில்லை; நான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப் போகிறேன்,” என்று டொனால்டு ட்ரம்ப் “ஐ டோண்ட் கேர்” மனநிலைக்குள் சென்றுவிட்டார்.
இந்நிலையில், ஈரான்...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பற்றி விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்த சில மணி நேரங்களில், தன்னை இயேசுவாக சித்தரிக்கும் ஏஐ புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேற்று முன்தினம் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 14-ம் லியோ பற்றி செய்தியாளர்களிடமும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். தான் போப்பின் ரசிகர் அல்ல என்றும் அவர் சிறந்த முறையில்...
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டோம் என்று அமெரிக்க ராணுவம் அறிவித்து உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பிலும் 2 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 11-ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 21...
மத்திய கிழக்கு துறைமுகங்களை தாக்குவோம்: ஈரான் ராணுவ மூத்த தளபதி இப்ராகிம் பகிரங்க எச்சரிக்கை
admin - 0
ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை தாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்டினென்ட் கர்னல் இப்ராகிம் ஸோல்பகாரி டெஹ்ரானில் நேற்று கூறியதாவது: எங்கள் எதிரிகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி வழங்கமாட்டோம். இந்த ஜலசந்தி தொடர்ந்து எங்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும். சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் செயல்பட்டு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை...
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளதன் எதிரொலியாக ஈரான் கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த 2 சரக்குக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி வைத்திருந்தது. இருப்பினும், மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில்...
கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு
admin - 0
கடல் கண்ணி வெடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
அமெரிக்கா உடனான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முழுவதும் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசியுள்ளது. குறிப்பாக கடலுக்கு அடியிலும், சில நூறு அடி ஆழத்திலும் கடலுக்கு மேலேயும் கண்ணி வெடிகள் வீசப்பட்டன. இதனால் சரக்குக் கப்பல் போக்குவரத்து முடங்கி உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுக்குத் தட்டுப்பாடு...









