Google search engine
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி-க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் விரைவில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு...
பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகள் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற சதி செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜெய்ர் போல்சனாரோ கடந்த 2019 முதல் 2022 வரை அந்நாட்டின் அதிபராக இருந்தார். வலதுசாரி கட்சித் தலைவரான இவர், 2022-ல்...
நே​பாளத்​தில் அரசுக்கு எதி​ராக வெடித்த கலவரத்​தால் பதற்​றம் நீடிக்​கும் நிலை​யில், அரசி​யல்​வா​தி​களை குறி​வைத்து தாக்​குதல்​கள் நடக்​கின்​றன. அங்​குள்ள வணிக வளாகங்​களை இளைஞர்​கள் கும்​பலாகச் சென்று கொள்​ளை​யடித்து வரு​கின்​றனர். பொதுச் சொத்​துகளுக்கு சேதம் விளை​வித்​தது தொடர்​பாக இது​வரை 26 பேரை ராணுவம் கைது செய்​துள்​ளது. 2008-ல் அண்டை நாடான நேபாளத்​தில் மன்​ன​ராட்சி முடிவுக்கு கொண்​டு​வரப்​பட்​டு, கம்​யூனிஸ்ட் அரசு ஆட்சி அதி​காரத்​தில் இருந்​தது. இந்​நிலை​யில், நேபாளத்​தில் சமூக ஊடகங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டது. இந்த...
 இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்​சு​வார்த்தை தொடர்​கிறது என்​றும், பிரதமர் மோடி​யுடன் பேச ஆவலாக உள்​ளேன் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். இதற்கு பதில் அளிக்​கும் வகை​யில், ட்ரம்​புடன் பேச நானும் ஆவலாக உள்​ளேன் என பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். அமெரிக்க அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனல்டு ட்ரம்ப், உலக நாடு​கள் தங்​கள் நாட்டு பொருட்​களுக்கு அதிக வரி விதிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி​னார். இதனால், பதி​லுக்கு பதில் வரி...
 பி​ரான்ஸ் நாட்​டில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் 3 நாட்​களுக்கு முன்பு மேற்​கொள்​ளப்​பட்ட நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பிரதமர் ஃபி​ரான்​சுவா பேரூ தோல்​வியடைந்த நிலை​யில், அவரது தலை​மையி​லான அரசு கவிழ்ந்​தது. பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் மொத்​தம் 577 உறுப்​பினர்​கள் உள்ள நிலை​யில், நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பேரூக்கு எதி​ராக 364 உறுப்​பினர்​களும், ஆதர​வாக 194 உறுப்​பினர்​களும் வாக்​களித்​தனர்​.19 உறுப்​பினர்​கள் வாக்​கெடுப்பை புறக்​கணித்​த​னர். இதன்​மூலம் கடந்த 12...
ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதி​ராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது. நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அவருடன் சேர்ந்​து, நாட்​டின் அதிப​ராக இருந்த ராம்​சந்​திர பவுடேலும் ராஜி​னாமா செய்​தார். இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்​தில் நிலவி வரும்...
ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் உறுப்பினர்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட கோழைத்தனமான இஸ்ரேலிய தாக்குதலை கத்தார் அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தக் குற்றவியல் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்கள்...
ஆஸ்​திரேலி​யா​வில் குடியேறும் இந்​தி​யர்​கள் எண்​ணிக்கை சமீப கால​மாக அதி​கரித்து வரு​கிறது. அங்கு குடியேறிய வெளி​நாட்​ட​வர்​களில் இங்​கிலாந்​துக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யர்​கள் 2-ம் இடத்​தில் உள்​ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கணக்​கெடுப்​பின்​படி 8.4 லட்​சம் இந்​தி​யர்​கள் அங்கு வசிக்​கின்​றனர். இதுத​விர, ஆயிரக்​கணக்​கானோர் ஆஸ்​திரேலி​யா​விலேயே பிறந்து குடி​யுரிமை பெற்​றுள்​ளனர். இந்​நிலை​யில், அங்கு வசிக்​கும் இந்​தி​யர்​களுக்கு எதி​ரான மனநிலை அதி​கரித்து வரு​கிறது. குறிப்​பாக, கடந்த சில வாரங்​களாக வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறு​வதற்கு எதி​ராக, நாடு...
நே​பாளத்​தில் இளம் தலை​முறை​யினரின் ஊழல் எதிர்ப்பு போராட்​டம் தீவிரமடைந்து வரு​கிறது. இதன் ​காரண​மாக அந்த நாட்டு பிரதமர் சர்மா ஒலி நேற்று பதவியை ராஜி​னாமா செய்​தார். உலகின் ஊழல் மிகுந்த நாடு​களில் ஒன்​றாக நேபாளம் திகழ்​கிறது. அந்நாட்டின் சமூக வலை​தளங்​களில் அண்​மை​யில் ‘‘நெப்போ பேபி’’ என்ற பெயரில் வீடியோக்​கள் பரவின. அதாவது நேபாளத்​தின் அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு...
ரஷ்யா உருவாக்கி உள்ள புற்றுநோய்க்கான தடுப்பூசி விரைவில் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்ததும் இது சாத்தியமாகும். உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயால் ஆண்டுதோறும் உலக அளவில் கோடிக் கணக்கான பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்திருந்தார். இந்த தடுப்பூசியின்...