மியான்மரில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சியை விரட்டி விட்டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், பவுர்ணமியை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை மத்திய மியான்மரில் உள்ள சவுங் யூ நகரில் புத்த மதத்தினர் ஏராளமானோர் கூடி விழா கொண்டாடினர். அப்போது புத்த மதத்தினர் கூடியிருந்த பகுதிகளில் ராணுவத்தினர் பாராகிளைடர்...
அக்.10, 2025... இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் நாள். அது, ஏற்கெனவே 7 போர்களை நிறுத்தியதாக முழங்கி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அறிவிக்கப்படுமா என்ற விவாதங்கள் எழுந்து ஓய்ந்துவிட்டன. இந்நிலையில், ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த முறை கிடைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக சில தரப்பும், அப்படி நடந்தால் அது அந்தப் பரிசுக்கே அவமதிப்பு என்று சிலரும் இப்போது கருத்து...
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவ நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு விவரங்களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று வெளியிட்டது. அமெரிக்காவை சேர்ந்த ஜான்...
இஸ்ரேல் – ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார் ட்ரம்ப்
admin - 0
இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டுள்ளகாசா மீண்டும் கட்டி எழுப்பப்படும். அந்த பகுதியில் இருந்து தீவிரவாதம்...
மருத்துவத்துக்கான நோபல் பரிசு, நோய் எதிர்ப்புத் தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வெல்பவர்கள் குறித்த அறிவிப்பு...
15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 உதவியாளர்களுடன் தனி விமானத்தில் அமீரகம் சென்ற ஆப்பிரிக்க அரசரின் வீடியோ வைரல்
admin - 0
ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள எஸ்வாட்டினி நாட்டின் அரச பரம்பரையில் வந்தவர் மெஸ்வாட்டி-3. பரம்பரை வழி அரசரான மெஸ்வாட்டி, கடந்த ஜூலை மாதம் தனது 15 மனைவிகள், 100 உதவியாளர்கள் புடைசூழ தனி விமானத்தில் அபுதாபியில் வந்திறங்கினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது அரசராக உள்ள மெஸ்வாட்டியின் தந்தை சோபுசா-2-வுக்கு 125 மனைவிகள் என்ற விஷயமும் தற்போது தெரியவந்துள்ளது.
15 மனைவிகளுடன் அரசர் மெஸ்வாட்டி வந்திறங்கிய வீடியோ...
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்கள் குறித்த அறிவிப்பு நேற்று முதல் வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு...
கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.
இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நகரமான சிடோர்ஜோவில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளிக் கட்டிடம் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) அன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கினர்.
இதனை தொடர்ந்து ஒரு வார காலமாக மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில்...
விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா என்ற தகவல் களஞ்சியத்தை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்கிறார். கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட விக்கிபீடியா உலகின் தகவல் களஞ்சியமாக செயல்படுகிறது. விக்கிமீடியா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் விக்கிபீடியாவை நிர்வகித்து வருகிறது. இந்த தளம் சுமார் 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களை வழங்கி வருகிறது. சுமார் 6.5 கோடிக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா என்ற...
ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) ஆட்சியில் உள்ளது. இக்கட்சியின் தலைவர் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஓராண்டுக்குப் பிறகு பதவி விலகுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதற்கிடையில், ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்தது. இதனால் பிரதமர் பதவியை ஷிகெரு கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.
அதனால், ஆளும்...










