Google search engine
2023-ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்தனர். அண்மையில் காலமான ஒரு வழக்கறிஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு நர்கெஸ் முகமதிசென்றபோது, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிகாரிகள் நர்கெஸ் முகமதியை பலவந்தமாகப் பிடித்துச் சென்றதாக அவருடைய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. நர்கெஸ் முகமதி,...
குறைந்தபட்சம் 10 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தி விரைவாக விசா பெருவதற்கான கோல்டு கார்டு திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிவைத்தார். அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதைக் கட்டுப்படுத்தவும், குடியுரிமை பெறுவதைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அதிபர் ட்ரம்ப் எடுத்து வருகிறார். இதனால், அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டனர். பல அமெரிக்க நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களும் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில்,...
மியான்மரில் ராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவமனை மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையை குறிவைத்து, ஆளும் மியான்மர் ராணுவத்தின் போர் விமானம் புதன்கிழமை இரவு வான்வழி தாக்குதல் நடத்தியதாக மியான்மர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அராக்கன் படை எனப்படும் கிளர்ச்சி...
எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு முதலில் 25 சதவீத வரி விதித்தது. இதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம் சாட்டி கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இந்திய பொருட்களுக்கு மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்க...
‘அவர்கள் குழந்தைகளாகவே இருக்கட்டும்’ (Let Them Be Kids) என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒரு மிகப் பெரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அதன் எதிரொலியாகத்தான் இப்போது, ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை செய்யும் சட்டம் அமலாகியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளப் பயன்படுத்துவதற்கான தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆஸ்திரேலியாவில்...
இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று மீண்டும் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஏற்கெனவே அவர் இவ்வாறாக 70 முறை கூறிவிட்டதாக விமர்சனங்கள் உள்ள நிலையில் அதை உறுதிப்படுத்துவது போலவே மீண்டும் அதனைக் கூறியுள்ளார் ட்ரம்ப். பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த ஒரு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப் கூறியதாவது: கடந்த 10 மாதங்களில் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கொசோவா - செர்பியா, பாகிஸ்தான்...
ஆப்​பிரிக்​கர்​கள் அரு​வருப்​பானவர்​கள் என்று அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் பேசி​யுள்​ளது சர்ச்​சையை கிளப்​பி​யுள்​ளது. பென்​சில்​வேனி​யா​வில் நடை​பெற்ற பேரணி​யில் ட்ரம்ப் கூறியதாவது: ”சோ​மாலி​யாவைச் சேர்ந்​தவர்​கள் அரு​வருப்​பானவர்​கள். பொது​வாக ஆப்​பிரிக்க நாடு​களில் இருந்து இங்கு குடிபெயர்ந்​தவர்​கள் அனை​வருமே குப்​பைகள்​ தான். அவர்​கள் அமெரிக்கா​வுக்கு தேவை​யில்​லை. அதற்கு பதிலாக நார்​வே, ஸ்வீடனிலிருந்து வருபவர்​களை நாம் ஏன் ஏற்க கூடாது? உங்​களுக்கு ஆட்​சேபனை இல்லை என்​றால் டென்​மார்க்​கி​லிருந்து சில நல்​ல​வர்​களை எங்​களுக்கு அனுப்புங்கள். சோ​மாலியா பேரழிவை ஏற்​படுத்​தும் இடம்....
‘‘இந்​திய பொருட்​களுக்கு ஏற்​கெனவே 50 சதவீத வரி விதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அரிசிக்கு கூடு​தலாக வரி விதிக்​கப்​படும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்​டல் விடுத்​துள்​ளார். உக்​ரைன் மீது போர் தொடுக்​கும் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை இந்​தியா நிறுத்த வேண்​டும் என்று அமெரிக்கா நிர்​பந்​தித்து வரு​கிறது. அதை மீறி தொடர்ந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், இந்​திய பொருட்​களுக்கு கூடு​தலாக 25 சதவீதம் வரி விதிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி அமெரிக்கா​வுக்கு...
பாகிஸ்​தான் பொருளா​தார நெருக்​கடியி​லிருந்து மீண்டு வரு​வதை கருத்​தில் கொண்டு கூடு​தலாக மேலும் ரூ.10,780 கோடி கடனுதவி வழங்க சர்​வ​தேச நாணய நிதி​யம் (ஐஎம்​எப்) ஒப்​புதல் அளித்​துள்​ளது. பாகிஸ்​தான் இது​வரை காணாத பொருளா​தார நெருக்​கடி​யில் சிக்​கித் தவித்து வந்​ததை அடுத்து தற்​போது அதில் இருந்து படிப்​படி​யாக மீண்டு வரு​கிறது. இதுகுறித்து ஐஎம்​எப் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பாகிஸ்​தானின் பொருளா​தார திட்​டங்​கள் குறித்த இரண்டு மதிப்​பாய்​வு​களை ஐஎம்​எப் நிர்​வாக குழு நிறைவு செய்​துள்​ளது. பாகிஸ்​தானின் பிர​தான கடன்...
சீ​னா​வின் சொத்து மேலாண்மை நிறு​வனம் ஒன்​றின் முன்​னாள் நிர்​வாகியை ஊழல் குற்​றச்​சாட்​டில் சீன அரசு நேற்று தூக்​கி​லிட்​டது. சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மாக 'சீனா ஹுவாரோங் இன்​டர்​நேஷனல் ஹோல்​டிங்ஸ் (சிஎச்​ஐஎச்)’ உள்​ளது. இதன் பொது மேலா​ள​ராக இருந்​தவர் பாய் தியான்​ஹுய். இவர் 2014 முதல் 2018 வரை திட்​டங்​களை செயல்​படுத்​து​வ​தில் 15.6 கோடி டாலர் லஞ்​சம் பெற்​ற​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது. இதில் அவர் குற்​ற​வாளி என...