Google search engine
மியான்​மர், கம்​போடி​யா, லாவோஸ் ஆகிய நாடு​களில் டிஜிட்​டல் மோசடி, சூதாட்​டம் ஆகியவை மிகப் பெரியள​வில் நடை​பெறுகிறது. சீனா-மியான்​மர் எல்​லை​யில் செயல்​படும் ஒரு கும்​பல் 1 பில்​லியன் டாலரை விட அதிக மதிப்​பில் சூதாட்​டம் மற்​றும் டிஜிட்​டல் மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளது. மேலும் சீனர்​கள் 14 பேர் இந்த கும்​பலால் கொலை செய்​யப்​பட்​டுள்​னர். இந்த கும்​பலில் ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 11 பேரை கடந்த 2023ம் ஆண்டு நவம்​பர் மாதம் சீன அதி​காரி​கள் கைது...
அமெரிக்​கா​வின் சைபர் செக்​யூரிட்டி அன்ட் இன்​பி​ராஸ்​டிரக்​கசர் செக்​யூரிட்​டி (சிஐஎஸ்ஏ) எனப்​படும் சைபர் பாது​காப்பு மற்​றும் உள்​கட்​டமைப்பு பாது​காப்​புப் பிரி​வின் செயல் இயக்​குந​ராக செயல்​பட்டு வருபவர் மது கோட்​டு​முக்​கலா. இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​த இவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிஐஎஸ்​ஏ-​வின் செயல் தலை​வ​ராக, தனது நம்​பிக்​கைக்​குரிய மது கோட்​டு​முக்​கலா​வை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியமித்​தார். அமெரிக்க அரசின் ரகசி​யங்​களை​யும், முக்​கிய விவரங்​களை​யும் பாது​காக்கும் பணி​யில் சிஐஎஸ்ஏ ஈடு​பட்டு வரு​கிறது. இதன்...
மியான்மரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், ராணுவ ஆதரவு பெற்ற யூனியன் மற்றும் ஒற்றுமை கட்சி (USDP) பெரும்பான்மை வெற்றியை பெற்றிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சியின் தலைவராக மின் ஆங் ஹ்லைங் உள்ளார். 2020 பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே ராணுவ ஆட்சியால் அவை ரத்து செய்யப்பட்டன. 2015 தேர்தலில்...
தமிழக கோ​யில்​களில் இருந்து கடத்​தப்​பட்ட நடராஜர் வெண்கல சிலை உட்பட 3 சிலைகளை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க அமெரிக்க அருங்​காட்​சி​யகம் ஒப்​புக் கொண்​டுள்​ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் ‘ஸ்​மித்​சோனியன் தேசிய அருங்​காட்​சி​யகம்’ உள்​ளது. இந்த அருங்​காட்​சி​யகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் தமிழகக் கோயில்​களில் இருந்து சட்​ட​விரோத​மாகக் கடத்​தப்​பட்ட 3 வெண்கல சிலைகளை திருப்பி ஒப்​படைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கடந்த 10-ம் நூற்​றாண்டை சேர்ந்த ஷிவா நடராஜர் சிலை, 12-ம் நூற்​றாண்டை சேர்ந்த...
சீனா​வுடன் வர்த்​தகம் செய்ய கனடா ஒப்​பந்​தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த ஒப்​பந்​தப்​படி கனடா வர்த்​தகத்​தில் ஈடு​பட்​டால், கனடா பொருட்​களுக்கு 100 சதவீத வரி விதிக்​கப்​படும் என எச்சரித்தார். இந்​நிலை​யில் அமெரிக்​கா​வின் கல்ப்​ஸ்ட்​ரீம் ஏரோஸ்​பேஸ் நிறு​வன விமானங்​களுக்​கு,கனடா அங்​கீ​காரம் வழங்​க​வில்லை என்​றால், அமெரிக்​கா​வில் விற்​பனை செய்​யப்​படும் கனடா தயாரிப்பு விமானங்​களுக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​து உள்​ளார். மேலும்,...
பாகிஸ்​தானின் வடமேற்கு பகு​தி​யில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்​தில் தெஹ்ரிக்​-இ-தலி​பான் பாகிஸ்​தான் (டிடிபி) என்ற தீவிர​வாத அமைப்பு செயல்​படு​கிறது. ஆப்​கானிஸ்​தான் தலி​பான்​களு​டன் தொடர்பு வைத்​திருப்​ப​தாகக் கருதப்​படும் டிடிபி, பாகிஸ்​தான் அரசுக்கு எதி​ராக செயல்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், மீண்​டும் டிடிபி அமைப்​பினர் மீது ராணுவம் தாக்​குதல் நடத்​தப்​போவ​தாக​வும், ஜனவரி 23-க்​குள் திரா பகு​தியை விட்டு வெளி​யேறு​மாறும் மசூதி ஒலிபெருக்​கி​கள் மூலம் ஒரு மாதம் முன்பே அறி​விப்பு வெளி​யிடப்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது. இதையடுத்​து, அப்​பகு​தி​யைச் சேர்ந்த...
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 27-ம் தேதி நிறைவடைந்தது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்கும் அமலுக்கு வரும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த வர்த்தக ஒப்பந்தம், அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று...
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சவூதி பத்திரிகை நிறுவனம் (SPA) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது, ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதில் சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை இளவரசர் உறுதிப்படுத்தினார். மேலும், ‘ஈரானுக்கு எதிரான எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்காகவும் சவூதி அரேபியா...
ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கே அதிக நன்மை கிடைக்கும் என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள ஜேமிசன் கிரீர், ‘‘இந்த ஒப்பந்தத்தை வியூக ரீதியாக புரிந்து கொள்வது முக்கியம். அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து, அமெரிக்க சந்தையை அணுகும் மற்ற நாடுகளுக்கான வரியை உயர்த்தியுள்ளார். இதனால், அந்த நாடுகள்...
உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும். அமேசான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி, இது குறித்து வெளியிட்ட பதிவில், “நிறுவனத்தின் படிநிலைகளைக் குறைக்கவும், அதிகாரத்துவத்தைக் களைந்து உரிமையை அதிகரிக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். அமேசான் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர்...