சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் 14-21, 7-21 என்ற செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள கனடாவின் விக்டர் லாயிடம் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 38 நிமிடங்களில் முடிவடைந்தது.
மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஷி...
கனடாவின் வின்னிபெக் நகரில் 'பான் அம்கப்' பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துருவ் சித்வாலா, சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்டை எதிர்த்து விளையாடினார்.
இதில் துருவ்சித்வாலா 972-1500 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் பெற்றார். ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியனான சித்வாலா தொடக்கத்தில் 450 புள்ளிகள் முன்னிலையில் இருந்த போதிலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்.
ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஹாங்காங்குடன் மோதுகிறது.இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதல்...
திலக் வர்மா அரை சதம் விளாசல்: இறுதிப் போட்டியில் தென் மண்டலம் – சேப்பாக்கத்தில் 6-ம் தேதி கிழக்கு மண்டலத்துடன் மோதல்
admin - 0
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் வடக்கு மண்டலம் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென் மண்டலம் அணி.
பெங்களூருவில் நடைபெற்று வந்த அரை இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் வடக்கு மண்டலம் 195 ரன்களும், கிழக்கு மண்டலம் 312 ரன்களும் எடுத்தன. 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வடக்கு மண்டலம் அணி நேற்றைய 4-வது நாள்...
ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் வரும் அக்டோபர் 26 முதல் 29 வரை சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கே.சி.ஜி கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான், மாலத்தீவு, பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் ஆகிய 13 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் இந்த தொடரின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் ஜெர்சி அறிமுக விழா சென்னை...
துலீப் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மத்திய மண்டலம் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கிழக்கு மண்டலம் அணி.
பெங்களூருவில் நடைபெற்று வந்த அரை இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மத்திய மண்டலம் அணி 266 ரன்களும், கிழக்கு மண்டலம் 266 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸை விளையாடிய மத்திய மண்டலம் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 50.2...
சீனாவின் ஷென்சென் நகரில் சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் உன்னதி ஹூடா 10-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் 12-ம் நிலை வீராங்கனையான கிம் கா யுனிடம் தோல்வி அடைந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிகரண் அம்சகருணன், அர்ஜூன் ஜோடியானது சீனாவின் சென் போ...
இந்திய அணி வரும் அக்டோபர் மாதம் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில் டெஸ்ட் தொடர் நவம்பர் 19-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. இந்த தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முக்கிய அங்கமாக உள்ளது....
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் வரும் 13, 15 மற்றும் 17-ம் தேதிகளில் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்ஷித் ராணா மற்றும் ஆல்ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் 4 பேரும்...
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 99-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ரோமன் சஃபியுலினை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு...









