சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் முதல் சுற்றில் லக்‌ஷயா தோல்வி

0
20

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 14-21, 7-21 என்ற செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள கனடாவின் விக்டர் லாயிடம் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 38 நிமிடங்களில் முடிவடைந்தது.

மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஷி யு ஜென்னை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தேவிகா ஷிகாக் 18-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் பல்கேரியாவின் கலோயானா நல்பண்டோவாவிடம் தோல்வி அடைந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான தன்வி சர்மா 21-16, 21-17 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் அமலி ஷூல்ஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-11, 21-16 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜுனைதி ஆரிஃப், காங் காய் சிங் ஜோடியை வீழ்த்தியது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here