ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவை 43 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது. இந்த இரு ஆட்டங்களையும் ஆர்சிபி அணி தனது சொந்த...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 211 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணிக்கு பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்தது.
அப்போது அதிரடி வீரர்களான விப்ராஜ் நிகாம், டேவிட் மில்லர் ஜோடி களத்தில் இருந்தது. விப்ராஜ் நிகாம் முதல் பந்தை...
மங்கோலியாவின் உலான்பாதர் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் நோமுந்தரி என்க்-அம்கலனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த சீன தைபேவின் ஹுவாங் ஹியாவோ...
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். ஜாஸ் பட்லர் 27 பந்துகளில் 52 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55 ரன்களும் விளாசினர். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு...
சீனாவின் நிங்க்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 7-வது இடத்தில் உள்ள சீனாவின் ஷி பெங்குடன் மோதினார்.
51 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 30-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி...
பில்லி ஜீன் கிங் கோப்பைக்கான ஆசியா-ஓசியானா குரூப் 1 டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் தாய்லாந்தை எதிர்த்து விளையாடியது.
இதில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் வைஷ்ணவி அட்கர் 1-6, 3-6 என்ற செட் கணக்கில் அஞ்சிசா சாண்டாவிடம் தோல்வி அடைந்தார். இதன் பின்னர் மழை காரணமாக எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. 2-வதாக...
“பும்ராவின் முதல் ஓவரிலேயே சூர்யவன்ஷி விளாசியது எனது அழுத்தத்தைக் குறைத்தது” – யஷஸ்வி ஜெய்ஸ்வால்
admin - 0
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் குவாஹாட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக 11 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது.
15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்களும், மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 பந்துகளில், 4...
சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவு 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதினார்.
இதில் பிரக்ஞானந்தா 44-வது சுற்றின் போது தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் பிரக்ஞானந்தாவின் கனவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் நபரே இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும்...
வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் கணித்து விட்டனர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி, கடந்த 2024 முதல் டி20 கிரிக்கெட்டில் 61 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்று முதல் அவரது பந்து...
ஐபிஎல் 2026 தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. மழையினால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 11 ஓவர்கள் மட்டுமே கொண்ட ஆட்டம்...










