2-வது டெஸ்ட்: யு-19 இந்திய அணி 316 ரன்கள் குவிப்பு; சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் நித்ய பாண்டியா
admin - 0
சென்னை: யு-19 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் யு-19 இந்திய அணிமுதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்தது. நித்ய பாண்டியா 94 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த யு-19 இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. வைபவ் சூர்யான்ஷி 3 ரன்னில்...
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் முழுநேர பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 2026-ம் ஆண்டு நடைபெறஉள்ள டி 20 உலகக் கோப்பை தொடர் வரை அவர், பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயசூர்யா கடந்த ஜூலை மாதம் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் இலங்கை அணி சிறந்த முடிவுகளை பெற்றது....
சென்னை: கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே உண்டுஉறைவிடப்பள்ளியில் சிபிஎஸ்இ தேசிய மகளிர் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.இதன் 2-வது நாளான நேற்று 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்தில் சென்னை எஸ்பிஓஏ 15-0 என்ற கோல் கணக்கில் டெல்லி பப்ளிக் பிலாஸ்பூர் பள்ளியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் புனே சிஎம் சர்வதேச பள்ளி 12-0 என்ற கோல் கணக்கில் ஓமன் இந்திய பள்ளி அணியை வீழ்த்தியது.
எஸ்பிஓஏ தனது 2-வது ஆட்டத்தில் ஹரியானாவின் வித்யா தேவி...
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 3,638 மாணவர்கள் பட்டம் பெற்றனர். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக இணைவேந்தரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை...
மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
admin - 0
துபாய்: மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை, தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக் கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.
அணியில் அதிகபட்சமாக ஸ்டெ பானி டெய்லர்...
லக்னோ: ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கெதிரான இரானி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 274 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஸ்ரீ அடல்பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 537 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவித்திருந்தது....
அபுதாபி: அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 139 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி.
அபுதாபியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 102 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 91 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 86 பந்துகளில், 4...
லக்னோ: இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசினார் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் வீரர் அபிமன்யு ஈஸ்வரன்.
லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சர்பராஸ் கான் 286 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் 222 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் அஜிங்க்ய ரஹானே...
ஷார்ஜா: மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.
ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்கள்...
பியூனஸ் அயர்ஸ்: 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில் தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்றில் அர்ஜெண்டினா அணி தனது அடுத்த ஆட்டங்களில் வெனிசுலாவுடன் வரும் 10-ம் தேதியும் பொலிவியாவுடன் 15-ம் தேதியும் மோத உள்ளது.
இந்த இரு ஆட்டங்களுக்கான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கணுக்கால் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் பங்கேற்காத 37...









