முல்டானில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டெஸ்ட் வரலாற்றில் இல்லாத விசித்திர முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் ஜோ ரூட் 262 ரன்களை விளாசி, ஹாரி புரூக்குடன் சேர்ந்து 454 ரன்கள் கூட்டணி அமைத்து பல டெஸ்ட் சாதனைகளை முறியடித்தார். மேலும் ஒரே காலண்டர் வருடத்தில் ஆயிரம் ரன்களை 5வது முறையாக எடுத்து சாதித்துள்ளார் ஜோ ரூட். பாகிஸ்தானுக்கு இப்படித் தோற்பது ஒன்றும் புதிதல்ல என்பது...
ஹைதராபாத்: இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நாளை (அக்டோபர் 12) ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் தொடங் கியது. குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள்...
தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். அடுத்த மாதம் நடைபெறும் டேவிஸ் கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். 38 வயதான ரஃபேல் நடால், இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் 14 பட்டங்கள் பிரெஞ்சு ஓபன் தொடரில் வென்றதாகும். சுமார் 20+ ஆண்டு காலம் களிமண் களத்தில் தனது ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தியவர். கடைசியாக...
அஸ்தானா: கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா அரை இறுதி சுற்றில், ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது. ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் அணி பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். ஜப்பான் அணிக்கு எதிரான மோதலில் முதலில் நடைபெற்ற...
முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 3-வது நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 492 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்திருந்த முன்னாள் வீரரான அலாஸ்டர் குக்கின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார். முல்தான் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 149...
ஆக்லாந்து: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 17 பேர் கொண்ட நியூஸிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கேப்டனாக டாம் லேதம் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த நட்சத்திர பேட்ஸ்மேனான...
சென்னை: ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட்போட்டியில் இந்தியா யு-19 அணிஇன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள்வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தடெஸ்ட் போட்டியில் இந்தியா யு-19 அணி முதல் இன்னிங்ஸில் 492ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா யு-19 அணி 80.2 ஓவர்களில்277 ரன்களுக்கு ஆட்டமிழந்துபாலோ-ஆன் ஆனது. 215 ரன்கள்பின்தங்கிய நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்துவிளையாடிய ஆஸ்திரேலியா...
ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், அடுத்து இயக்கும் படம், 'டிஎன்ஏ', அதர்வா நாயகனாக நடித்துள்ளார். நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் கதையான இந்தப் படத்தை ஒலிம்பியா மூவீஸ் சார்பில் ஜிப்ரான் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தப் படத்துக்கு 5 பாடல்களுக்கு 5 இசை அமைப்பாளர்கள் இசை...
குவாலியர்: குவாலியரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. 128 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 11.5 ஓவர்களிலேயே இலக்கை வெற்றிகரமாக எட்டியது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. குவாலியர் போட்டியில் வங்கதேச அணி சீரான இடைவேளையில் விக்கெட்களை அந்த...
புதுடெல்லி: இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான தீபா கர்மகார் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 31 வயதான தீபா கர்மகார் கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வால்ட் பிரிவில் 4வது இடம் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 0.15 புள்ளிகள் வித்தியாசத்தில் அவர், பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தார். இந்தியாவில் இருந்து ஒலிம் பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்த அவர். விளையாட்டில் இருந்து ஓய்வு...