Google search engine
 இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. கணிக்க முடியாத அணியாகவும் அச்சமின்றியும் விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதில் இருந்து...
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வதுடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. ருவான் டி ஸ்வார்ட் அரை சதம் அடித்தார். 2-ம் நிலை வீரர்களை உள்ளடக்கிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் மவுண்ட் மவுங்கனுயில் நடைபெற்ற...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி 20 கிரிக்கெட் போட்டியில் ஆந்த்ரே ரஸ்ஸல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு ஆகியோரது அதிரடியால் 37 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 8.4...
பிரைம் வாலிபால் லீக்கின் 3-வது சீசன்போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (15-ம் தேதி) தொடங்குகிறது. வரும் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபன்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ், மும்பை மீட்டியார்ஸ் ஆகியஅணிகளுடன் டெல்லி டூபான்ஸ் அறிமுகஅணியாக களமிறங்குகிறது. முதல் இரு சீசன்களிலும் லீக்...
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஸ்பெயினில் உள்ள கிரனடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர்ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இஷா அனில் தக்சலே இறுதி சுற்றில் 251.8 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஷாம்பவி ஷிர்சாகர் 227.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா 3 பதக்கங்களையும் முழுமையாக...
மகாராஷ்டிர மாநிலம் ஷேகானில் உள்ள மவுலி பள்ளியில் தேசிய சப்-ஜூனியர் அட்யா பட்யா சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் தமிழக ஆடவர் அணி லீக் சுற்றில் கேரளா, டெல்லி, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய அணிகளை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் கால் இறுதி சுற்றில் தமிழக அணி, புதுச்சேரியிடம் தோல்வி அடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.அதேவேளையில் மகளிர் பிரிவில் தமிழக அணி வெண்கலப் பதக்கம்...