ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 23-ம் தேதி மும்பை அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த சீசனுக்கு தயாராகும் விதமாக சிஎஸ்கே அணி வீரர்கள் 10 நாட்கள் கொண்ட பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளனர்.
இந்த பயிற்சி முகாம் சென்னை நாவலூரில் உள்ள...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. லாகூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. தனது 6-வது சதத்தை விளாசிய இப்ராகிம் ஸத்ரன் 146 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 177 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் சாம்பியன்ஸ்...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விதர்பா - கேரளா அணிகள் இன்று மோதுகின்றன.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 90-வது சீசன் இறுதிப் போட்டி நாக்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முன்னாள் சாம்பியனான விதர்பா, கேரளா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கேரளா அணி முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. விதர்பார் அணி கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
அக்சய் வத்கர்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு லாகூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே தங்களது முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருந்தது. இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் ஆப்கானிஸ்தான் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடமும் தோல்வி அடைந்திருந்தன. இதனால் இரு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டும்...
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின் ஜோடி, உலகின் முதல் நிலை ஜோடியான எல் சவேடாரின் மார்செலோ அரேவாலோ, குரோஷியாவின் மேட் பாவிச் ஜோடியுடன் மோதியது. இதில் யுகி பாம்ப்ரி ஜோடி 4-6 7-6(1), 10-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நேற்று ராவல்பிண்டியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இரு அணிகளும் தலா 3 புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் நெட் ரன் ரேட்...
பாட்மிண்டன் வீரர் லக்சயா சென் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக போலீஸாருக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாட்மிண்டன் வீரர் லக்சயா சென், பிறந்த தேதியை மாற்றி மோசடி செய்துள்ளார் என்று கூறி கர்நாடகாவைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், லக்சயா சென் மற்றும் அவரது சகோதரர் சிராக் சென் ஆகியோரின் பெற்றோர் திரேந்திரா, நிர்மலா சென், அவரது சகோதரரும், பயிற்சியாளரும்,...
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று (25-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஸ்ரீரா கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு எஃப்சி அணி 21 ஆட்டங்களில் விளையாடி, 10 வெற்றி, 4 டிரா, 7 தோல்விகளுடன் 34 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சென்னையின் எஃப்சி அணி 21 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி,...
நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்தும் வேலையை செய்தேன்: சொல்கிறார் விராட் கோலி
admin - 0
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. 242 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 45 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில்...
பாகிஸ்தான் அணிக்கு மூளை இல்லை; என்ன செய்ய வேண்டுமென யாருக்கும் தெரியவில்லை – ஷோயிப் அக்தர்
admin - 0
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்த நிலையில், நேற்று முன்தினம் இந்திய அணி அணியிடமும் வீழ்ந்தது. இரு தோல்விகளால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி எந்த ஒரு கட்டத்திலும் போராடாமல் விளையாடிய விதம்...









