நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட்

0
366

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வதுடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. ருவான் டி ஸ்வார்ட் அரை சதம் அடித்தார்.

2-ம் நிலை வீரர்களை உள்ளடக்கிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் மவுண்ட் மவுங்கனுயில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூஸிலாந்து 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று ஹாமில்டன் நகரில் தொடங்கியது

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய அந்த அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. கிளைட் ஃபோர்டுயின் ரன் ஏதும் எடுக்காத நிலையில் மேட் ஹென்றி பந்து வீச்சில் கல்லி திசையில் நின்ற கிளென் பிலிப்ஸின் அற்புதமான கேட்ச் காரணமாக வெளியேறினார்.

சற்று தாக்குப்பிடித்து விளையாடிய மற்றொரு தொடக்க வீரரரும் கேப்டனுமான நெய்ல் பிராண்ட் 38 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம் ஓ’ ரூர்க் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அவருக்கு உறுதுணையாக விளையாடிய ரெய்னார்ட் வான் டோண்டர் 71 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் நெய்ல் வாக்னர் பந்து வீச்சில் கல்லி திசையில் நின்ற டாம் லேதமிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். இதைத் தொடர்ந்து 99 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்த ஜூபைர் ஹம்சா, ரச்சின் ரவீந்திரா பந்தில் ஆட்டமிழந்தார். சுமார் இரண்டரை மணி நேரம் களத்தில் நின்று அச்சுறுத்தல் கொடுத்த டேவிட் பெடிங்ஹாம் 102 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திரா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து களறிமிங்கிய கீகன் பீட்டர்சனை 2 ரன்னில் வெளியேற்றினார் ரச்சின் ரவீந்திரா. 62 ஓவர்களில் 150 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் ருவான் டி ஸ்வார்ட்டுடன் இணைந்த ஷான் வான் பெர்க் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். நிதானமாக விளையாடிய ருவான் டி ஸ்வார்ட் 115 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் தனது முதல் அரை சதத்தை கடந்தார்.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 89 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. ருவான் டி ஸ்வார்ட் 55, ஷான் வான் பெர்க் 34 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நியூஸிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்களையும் மேட் ஹென்றி, நெய்ல் வாக்னர், வில்லியம் ஓ’ ரூர்கே ஆகியோர்தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க இன்று 2-வது நாள் ஆட்டத்தை எதிர்கொண்டது தென் ஆப்பிரிக்க அணி. இருந்தும் வெறும் 22 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட் ஆனது. தற்போது நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here