Google search engine
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ஆடவருக்கான ‘பி’ டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. 31 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரை தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் அர்ஜூன் துரை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட சங்க தலைவர் பூமிநாதன், போட்டியின் ஸ்பான்ஸர் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜன், முகமது ஹசன், சென்னை மாவட்ட...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இகா ஸ்வியாடெக், ஜன்னிக் சின்னர்ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 2-6, 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 3-ம் நிலை வீரரான...
புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ லெவன் - மும்பை அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த டிஎன்சிஏ லெவன் முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. பூபதி வைஷ்ண குமார் 63, சோனு யாதவ் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த டிஎன்சிஏ லெவன் அணி 117.3 ஓவர்களில்...
திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் ‘தைபா செலிபிரிட்டி வாலிபால் லீக்’ போட்டி சென்னையில் வரும் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. கே.எஸ்.டி. ஸ்டுடியோஸ், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் ஆதரவோடு முதலாவது தைபா செலிபிரிட்டி வாலிபால் லீக் போட்டியை சென்னையில் நடத்துகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை ஸ்டார்ம்ஸ், மதுரை ஹரிகேன்ஸ், கோவை தண்டர்ஸ் ஆகிய மூன்று...
புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் டிஎன்சிஏ லெவன் - மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த டிஎன்சிஏ லெவன் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்ஜன் பால் 87 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 65 ரன்களும், பாபா இந்திரஜித் 115...
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ஆடவருக்கான ‘பி’ டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மகளிருக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் விளையாட்டரங்கில் இன்று (ஆக.28-ம் தேதி) தொடங்குகிறது. மகளிருக்கான போட்டி 30-ம் தேதி வரையும், ஆடவருக்கான போட்டிகள் 31-ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. ஆடவர் பிரிவில் 31 அணிகளும், மகளிர் பிரிவில் 16 அணிகளும் கலந்து...
இங்கிலாந்து - இலங்கை இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி நாளை (ஆக.29-ம் தேதி) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடும் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக விலகிய வேகப்பந்து...
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 169 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல போராட உள்ளனர். இந்த விளையாட்டு திருவிழாவில் இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள்...
9-வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணி விவரம்: பாத்திமா சனா (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், குல் பெரோசா, இராம் ஜாவேத், முனீபா அலி, நஷ்ரா சுந்து,...
ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை தன்வி பத்ரி சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவின் செங்டு நகரில் நேற்று நடைபெற்ற ஆசிய 15 வயதுக்குட்பட்டோர் மகளிர் ஒற்றையர் பிரிவில் தன்வி பத்ரி, வியட்நாம் வீராங்கனை தி து ஹுயன் குயனுடன் மோதினார். இதில் தன்வி பத்ரி 22-20, 21-11 என்ற செட் கணக்கில் தி து ஹுயன் குயனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல்...