புதுடெல்லி: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வி கண்டார்.
பிரான்ஸ் நாட்டின் மான்ட்பெல்லியர் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், உலகத் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மணிகா பத்ரா, சீனாவின் கியன் டியான்யியுடன் மோதினார். இதில் கியன்டியான்யி 11-8,...
புஜாரா போன்ற வீரர்கள் அணியில் இல்லாததால் தோல்வி: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
admin - 0
புதுடெல்லி: சேதேஷ்வர் புஜாரா போன்ற வீரர்கள் அணியில் இல்லாததால் தோல்வி அடைந்து வருகிறோம் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நியூஸிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளது.
இதனிடையே, தொடர்ந்து 2...
சிட்னி: எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கான அணியில் முகமது ஷமி இடம்பெறாதது இந்தியாவுக்கு பெரிய இழப்பு என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 22 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7 வரையிலான தேதிகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணி அண்மையில்...
மிட்செல் சாண்ட்னரின் சுழலில் சிக்கிய இந்திய அணி; 301 ரன்களுடன் நியூஸிலாந்து முன்னிலை | புனே டெஸ்ட் ஹைலைட்ஸ்
admin - 0
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 45.3 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி 79.1 ஓவரில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டேவன் கான்வே 76, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து விளையாடிய...
புனே: இந்தியாவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்களைச் சாய்த்தார்.
பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் புனேவில் 2-வது போட்டி நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. கே.எல்.ராகுல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு...
புதுடெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 29 வயதாகும் ராணி ராம்பால், 2021-ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 4-வது இடம் பெற உதவியவர். 16 ஆண்டுகளாக ஹாக்கி விளையாடி உள்ளார் ராணி ராம்பால். இந்திய அணிக்காக 254 போட்டிகளில் விளையாடியுள்ள ராணி ராம்பால் 205 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். மேஜர் தயான்சந்த்...
புதுடெல்லி: ஜெர்மனி அணிக்கெதிரான 2-வது ஹாக்கி போட்டியில் இந்திய அணி வென்றது.
டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் ஜெர்மனி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய அணிக்காக சுக்ஜீத் சிங் 2 கோல்களும் (34, 48-வது நிமிடம்), ஹர்மன் பிரீத் சிங் 2 கோல்களும் (42, 43-வது நிமிடம்), அபிஷேக் ஒரு கோலும் (45-வது நிமிடம்) அடித்தனர்.இதையடுத்து ஹாக்கி...
இந்தியா - ஜெர்மனி ஆடவர் ஹாக்கி அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஜெர்மனி அணி தரப்பில் 4-வது நிமிடத்தில் ஹென்ரிக் மெர்ட்ஜென்ஸும், 30-வது நிமிடத்தில் லூகாஸ் விண்ட்ஃபெடரும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி 8 பெனால்டி...
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25ம் ஆண்டு சீசனில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று (24-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
எஃப்சி கோவா, 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 5 புள்ளிகளை பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதே வேளையில்...
டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே உலக சாதனை: 43 பந்துகளில் 133 ரன்கள் விளாசிய சிக்கந்தர் ராசா
admin - 0
டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று தொடரில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் குவித்துள்ளது ஜிம்பாப்வே. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை ஜிம்பாப்வே படைத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா, 43 பந்துகளில் 133 ரன்கள் விளாசினார்.
கென்யாவின் நைரோபியில் உள்ள ருவாரகா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் புதன்கிழமை (அக்.23) நடைபெற்ற ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான...










