இந்திய மகளிர் ஹாக்கி முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் ஓய்வு

0
40

புதுடெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 29 வயதாகும் ராணி ராம்பால், 2021-ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 4-வது இடம் பெற உதவியவர். 16 ஆண்டுகளாக ஹாக்கி விளையாடி உள்ளார் ராணி ராம்பால். இந்திய அணிக்காக 254 போட்டிகளில் விளையாடியுள்ள ராணி ராம்பால் 205 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருது, பத்ம விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here