இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25ம் ஆண்டு சீசனில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று (24-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – எஃப்சி கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
எஃப்சி கோவா, 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 5 புள்ளிகளை பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதே வேளையில் சென்னையின் எஃப்சி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகளை பெற்று பட்டியலில் 6-வது இடம் வகிக்கிறது. இதனால் அந்த அணி வெற்றியை தொடரும் முனைப்பிலும், எஃப்சி கோவா வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பிலும் களமிறங்குகின்றன.