சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை திட்டம்
admin - 0
சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, சுமார் ரூ.10 கோடியில் முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது. கோல்டு (ரூ1,000), டைமண்ட் (ரூ.2,000), பிளாட்டினம் (ரூ.3,000), பிளாட்டினம் பிளஸ் (ரூ.4,000) என நான்கு வகையானபரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழு உடல் பரிசோதனை செய்துள்ளனர். தமிழகத்திலேயே முதன்முறையாக, கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை...
சென்னை, புறநகரில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் தினமும் 12 லட்சம் பேர் ரயிலில் பயணிக்கின்றனர். இதில் சுமார் 8.6 லட்சம் பயணிகள் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 9 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை...
திருப்பரங்குன்றம் வழக்குகளில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: தலைமை நீதிபதி முடிவுக்கு பரிந்துரை
admin - 0
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து உரிய முடிவு எடுக்க தலைமை நீதிபதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில்,...
ஸ்டாலினா பெட்டியைத் திறந்து மனுக்களை படிக்கப் போகிறார்? – உள்ளதைச் சொல்ல முடியாமல் உழலும் உடன்பிறப்புகள்!
admin - 0
ஆளும் கட்சியாக இருந்தாலும் அடிமட்ட திமுக-வினருக்கு ஆயிரம் மனக்குறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், இந்தச் சந்திப்புகளில் ஆர்வமாக பங்கெடுக்கும் உடன்பிறப்புகள், தங்களது மனக்குமுறலை கொட்டி ஆறுதல் தேட முடியாமல் பேருக்கு வந்து போய்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதற்கு முன்பும் இதுபோன்ற சந்திப்புகளை நடத்தி இருக்கிறார் ஸ்டாலின். அப்போதெல்லாம்,...
சேலம், தருமபுரி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டங்களை கடந்த 19-ம் தேதி கூட்டினார் அன்புமணி ராமதாஸ். அதற்கு முந்தைய நாளே, பாமக எம்எல்ஏ-க்களான கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணியும், அருளும் நெஞ்சு வலி என்று சொல்லி மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். இவர்கள் இருவருமே மருத்துவர் அய்யாவுக்கு அணுக்கமாக இருப்பவர்கள் என்பதால் இந்த ‘நெஞ்சுவலி’ விவகாரமும் விவாதப் பொருளானது.
அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை நடத்திய அதேநாளில் இவர்கள் இருவரையும் மருத்துவர் ராமதாஸும்...
தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் சிலை கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றம்
admin - 0
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சென்னை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அவரது சிலை, கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் சுடலைமுத்துப்பிள்ளை - இசக்கி அம்மாள் தம்பதியருக்கு கடந்த 1908-ம் ஆண்டு மகனாக பிறந்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கிருஷ்ணன் என்பதாகும்.
கலையுலக மாமேதை ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ்...
‘பாரதம் எப்போதும் அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறது’ என, கோவையில் நடந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
கோவை பேரூர் ஆதீனம் மறைந்த ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா, பேரூர் மடத்தில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராகுல்ராஜா வரவேற்றார். சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தொடக்க உரையாற்றினார்.
தொடர்ந்து, உலக நன்மைக்காக நடத்தப்பட்ட வேள்வியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்...
தொழில் வணிகத் துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வான 50 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில் வணிகத் துறையானது சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு திட்டங்கள், நிறுவனங்களை அமைக்க மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான மானியங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை தொழில்முனைவோரின் மூலம் தமிழகத்தின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் வழங்கி பங்காற்றி...
நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்க கூடாது: ஆளுநர் ஆர்.என்.ரவி
admin - 0
நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் கூறினார்.
தமிழக ஆளுநர் மாளிகை சார்பில், மேற்கு வங்க மாநிலம் உருவான தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்தியா பல வேற்றுமைகளை கொண்ட நாடு. இங்கு ஏதாவது நடந்தால் மேற்கு வங்கத்தில் அதன் எதிர்வினை இருக்கும்.
அதேபோல் மேற்கு வங்கத்தில் ஏதாவது நடந்தால்...
ஒரே நாளில் தூய்மையானது முருக பக்தர்கள் மாநாடு நடந்த இடம்: மாநாட்டில் பங்கேற்றவர்களே ஒழுங்குபடுத்தி முன்னுதாரணம்
admin - 0
மதுரையில் நேற்று முன்தினம் பல லட்சம் பக்தர்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு முடிந்ததும், மாநாட்டுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே ஒன்று திரண்டு தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை தாங்களே எடுத்து அடுக்கி வைத்ததோடு மாநாட்டு திடலையும் சுத்தம் செய்து, இதுபோன்ற மாநாடு, விழாக்களை நடத்துவோருக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பொதுவாக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் நடத்தும் மாநாடுகள், கூட்டங்கள் முடிந்த பிறகு, மறுநாள் அந்த இடமே உணவு பொட்டலங்கள், தண்ணீர்...










