Google search engine
மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலை வழக்கை சிபிஐ விசா​ரித்​தால் தாமதம் ஏற்​படும். எனவே, நீதி​மன்ற நேரடிக் கண்​காணிப்​பில் சிபிசிஐடி விசா​ரணையே போது​மானது என்று அஜித்​கு​மார் குடும்ப வழக்​கறிஞர் கணேஷ்கு​மார் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் (27), நகை திருட்டு புகார் தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தார். இந்த வழக்கை சிபிஐ விசா​ரணைக்​குப் பரிந்​துரை செய்து தமிழக முதல்​வர்...
அஜித்​கு​மாரின் சகோ​தரருக்கு அரசு வேலை அளித்​துள்​ளது கண்​துடைப்​பாகும். அவர் இருக்​குமிடத்​திலிருந்து 80 கி.மீ. தொலை​வில் காரைக்​குடி​யில் வேலை கொடுத்​துள்​ளனர் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீ​ஸார் தாக்​குதலில் உயி​ரிழந்த கோயில் காவலாளி அஜித்​கு​மார் குடும்​பத்​தினரை நேற்று சந்​தித்து ஆறு​தல் கூறிய நயி​னார் நாகேந்​திரன், ரூ.5 லட்​சம் நிதி​ உதவி அளித்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: திமுக ஆட்​சி​யில் கடந்த 4 ஆண்​டு​களில்...
மதுரை எய்ம்ஸ் தலை​வர் பிர​சாந்த் லவானியா தலை​மையி​லான ஆலோ​சனைக் கூட்​டம் தோப்​பூர் எய்ம்ஸ் வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில், எய்ம்ஸ் நிர்​வாக அதி​காரி ஹனு​மந்​த​ராவ், எம்​.பி.க்​கள் மாணிக்​கம் தாகூர், ராணி கு​மார், சந்​திரசேகரன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். பின்​னர் எய்ம்ஸ் நிர்​வாக அதி​காரி ஹனு​மந்​த​ராவ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எய்ம்ஸ் 4-வது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்​று, ராம​நாத​புரத்​தில் மாணவர்​கள் படித்து வரு​கின்​றனர். தோப்​பூரில் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டிடப் பணி தொடங்​கப்​பட்​டு,...
மேட்​டூர் அணையி​லிருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 18,615 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 19,286 கனஅடி​யாக​வும், மதி​யம் 24,735 கன அடி​யாக​வும், மாலை 29,423 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது. இந்​நிலை​யில் மேட்​டூர் அணையி​லிருந்து நீர்​திறப்பு நேற்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 24,000 கனஅடியி​லிருந்து 30,000 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அணை மற்​றும் சுரங்க மின்...
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் காசிமேடு காசிமாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த ராஜா(61), அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி(60), சேகர், ஜெகன், விஜயமூர்த்தி, சுதாகர் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 30-ம் தேதி சென்றனர். சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 58 கடல் மைல் தொலைவில் கடந்த 1-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது காற்று வேகமாக வீசியுள்ளது. கடலடி நீரோட்டமும் வேகமாக இருந்துள்ளது. இதனால்,...
தெற்கு ரயில்வேயில் சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அத்திப்பட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை 2 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இந்த பாதை வழியாக மின்சார, விரைவு, சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவு, சரக்கு ரயில்கள் செல்லும் போதெல்லாம், மின்சார ரயில்கள் ஆங்காங்கே ஓரமாக நிறுத்தப்படுகின்றன. இதனால் இத்தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள் தினமும் 45 நிமிடங்கள் வரையில் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. எனவே இத்தடத்தில் கூடுதலாக ரயில் பாதை அமைக்க...
தமிழகத்​தில் மாநக​ராட்​சி, நகராட்​சிகளுக்கு உட்​பட்ட பகு​தி​களில் ரூ.52 கோடி​யில் அமைக்​கப்​பட்ட 208 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​கள், ரூ.60 கோடி​யில் அமைக்​கப்​பட்ட 50 ஊரக, நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: ‘நகர்ப்​புறங்​களில் மக்​கள் அதிக அளவில் அரசுப் பொது மருத்​து​வ​மனையை நோக்கி வரு​வ​தால், மருத்​து​வ​மனை​களில் கூட்​டம் அதி​க​மாகி வரு​கிறது. இந்த நிலையை மாற்​றி, ஒருங்​கிணைந்த, தரமான மருத்​துவ சேவை​களை...
மின்​வாரி​யத்​துக்கு டிரான்​ஸ்​பார்​மர்​கள் கொள்​முதல் செய்​த​தில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்​படுத்​தி​ய​தாக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோருக்கு எதி​ரான புகார் மீது வழக்​குப்​ப​திவு செய்ய அனு​மதி வழங்​கு​வது தொடர்​பாக ஒரு வாரத்​தில் முடிவு எடுக்​கப்​படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தகவல் தெரி​வித்​துள்​ளது. கடந்த 2021- 23 கால​கட்​டத்​தில் தமிழக மின்​வாரி​யத்​துக்கு 45,800 டிரான்​ஸ்​பார்​மர்​கள் கொள்​முதல் செய்ய ரூ.1,182 கோடியே 88 லட்​சத்​துக்கு டெண்​டர் கோரப்​பட்​டது....
2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சாட்சியாக வைத்துக் கொண்டு சொன்ன உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் நாளிதழ் பேட்டி ஒன்றில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜக-வும் இடம்பெறும். அதிமுக-வைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்” என்று இபிஎஸ் தரப்புக்கு இன்னொரு ஷாக் கொடுத்திருக்கிறார். 2024 மக்​கள​வைத் தேர்​தலின் போது அதி​முக கூட்​ட​ணிக்கு பாஜக...
காவல் நிலையத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் பேக்கரி நடத்தி வரும் சிவாஜி என்பவர், மதுமிதா என்பவருக்கு செல்போனில் தகாத வார்த்தைகளால் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுமிதா, கர்ப்பிணியான தனது தோழி செவ்வந்தி, தனம் ஆகியோருடன் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில்...