இண்டியா கூட்டணிக்கு சாதகமாக முடிவு வரவில்லை என்றால் தலைவர்கள் ஒற்றுமையின்மையே காரணம்: ஆர்.எஸ்.பாரதி கருத்து
admin - 0
மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒருவேளை இண்டியா கூட்டணிக்கு சாதகமாக வரவில்லை என்றால், அதற்கு கூட்டணியில் உள்ள சில தலைவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையே காரணம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்ததாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவே உள்ளன. இந்நிலையில், ஐஏஎன்எஸ் செய்திமுகமையிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல்முடிவு தொடர்பாக கூறியிருப்பதாவது:
மக்களவை தேர்தல் முடிவுகள் ஒருவேளை...
தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் இயந்திரத்தை வேட்பாளர்கள் சோதனையிடலாம்: வழிகாட்டுதல் வெளியிட்டது ஆணையம்
admin - 0
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, வாக்குப்பதிவு தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள, தேர்தலில் 2, 3-வது இடம்பிடித்த வேட்பாளர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் தொடர்பாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல்26-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தலில் 2, 3-வது இடம் பிடித்த வேட்பாளர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தொகுதியில் பயன்படுத்தப்பட்ட...
வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சேவை குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ‘பேங்க் கிளினிக்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 12 பொதுத் துறை மற்றும் 20 தனியார் வங்கிகளுக்கு நாடு முழுவதும் ஒரு லட்சம் கிளைகள் உள்ளன. நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் இன்றைக்கு வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். ரூ.2.07 லட்சம் கோடி...
“என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தேச சேவைக்காகவே அர்ப்பணிப்பேன்”: விவேகானந்தர் மண்டப பதிவேட்டில் மோடி உருக்கம்
admin - 0
எனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தேச சேவைக்காகவே அர்ப்பணிப்பேன் என்று கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பதிவேட்டில் பிரதமர் மோடி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் இந்தியில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கடைகோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில், இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமான உணர்வை அனுபவித்து வருகிறேன். பார்வதி தேவியும், சுவாமிவிவேகானந்தரும் இந்தப் பாறையில் தியானம்...
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, இன்று (ஜூன் 3) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதேபோல் தலைவர்கள் பலரும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர்...
ஏழை மக்களின் தேவையையும், பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த இரு மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை. பொதுமக்களுக்கு வழங்குவதற்கான துவரம்பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு...
சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்தானால் பெற்றோருக்கு 3 மாதம் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்: புதிய விதிகள் நாளை முதல் அமல்
admin - 0
18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் நாளை (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் புதிய ஓட்டுநர் உரிம விதிகள் ஜூன் 1-ம் தேதி முதல்அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் எளிமைப்படுத்தப்படும்....
கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று இரவு தொடங்கினார். வான்வழி, கடல்வழி, தரைவழி என முப்படை பாதுகாப்பு கன்னியாகுமரியில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 132 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி...
உலகிலேயே முதல்முறையாக முப்பரிமாண பிரின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட செமி கிரையோஜெனிக் இன்ஜினுடன் கூடிய அக்னிபான் தனியார் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
சென்னை ஐஐடியுடன் இணைந்து ஏராளமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், அக்னிகுல் காஸ்மோஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனியார் பயன்பாட்டுக்கு தேவைப்படும் சிறிய ரக ராக்கெட்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சம் 300கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் திறன்...
பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை: ஜூன் 11 முதல் 19 வரை நடைபெற உள்ளது
admin - 0
மக்களவைத் தேர்தல் விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின், ஜூன் 11 முதல் 19-ம் தேதி வரை 4 நாட்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார்.
மக்களவை பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள்அமலில் இருப்பதால், அரசு தொடர்பான எந்த நிகழ்வுகளையும் நடத்த முடியாத நிலை உள்ளது.
சட்டப்பேரவை கூட்டம்: தேர்தல் முடிவுகள் வெளியான பின், வரும் ஜூன்...










