புயல் நிலவரம்: தமிழகத்தில் நவ.30 வரை மழை எச்சரிக்கை; மீனவர்கள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தல்
admin - 0
சென்னையில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 30 வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி மாலை வரை மணிக்கு 55 முதல்...
கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் நேற்று நாள் முழுவதும் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முக்கிய சாலைகள் வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
நாகையில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டம்...
குடியரசு தலைவர் இன்று உதகை வருவதை முன்னிட்டு, நேற்று வாகன ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு வரும் அவர், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் உதகை வருகிறார். உதகையில் ராஜ்பவனில்...
அதானி ஊழல் பிரச்சினையை திசை திருப்ப பாமக நிறுவனர் ராமதாஸ் முயற்சி செய்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் குற்றச்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வைகோ: மின்வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் நியூயார்க் நீதிமன்றம் கவுதம் அதானிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடி முதன்முதலில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது கவுதம் அதானியைதான் உடன் அழைத்துச் சென்றார். அதானி நிறுவனத்துக்கு ரூ.6,200 கோடி...
காத்திருப்போர் பட்டியலில் உள்ள கால்நடை மருத்துவர் பணிநியமனம் குறித்து ஆலோசனை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
admin - 0
தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள கால்நடை மருத்துவர்களுக்கான பணிநியமனம் தொடர்பான அதிகாரிகள் அளவிலான கூட்டம் நாளை (நவ.28) நடைபெறவுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான அருள்ஜோதி உட்பட 83 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: அரசு கால்நடை மருத்துவமனைகளில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் உதவி கால்நடை மருத்துவர்களுக்கான பணி நியமனம் மேற்கொள்ளவில்லை....
தற்கொலைகள் தொடர்ந்து நடப்பதால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
admin - 0
பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடருவதால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர், பல மாதங்களாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார். வேலைக்குகூட செல்லாமல் மற்றவர்களிடம் கடன்...
தேசிய சட்ட நாளையொட்டி முதல்வர் தலைமையில் அரசமைப்பு முகப்புரை வாசிப்பு: அரசு, கட்சி அலுவலகங்களில் உறுதிமொழி
admin - 0
தேசிய சட்ட நாளையொட்டி அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு தினம் (தேசிய சட்ட நாள்) நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-ம் ஆண்டு நாளையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறை செயலர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்....
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாக வாய்ப்பு: டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை
admin - 0
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...
சென்னை துறைமுகத்தில் கழிவு செய்யப்பட்ட இயந்திர இரும்பு பொருட்களுக்கான டெண்டர் அய்யப்பாக்கத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் சண்முகம் என்பவருக்கு வழங்கப்பட்டது. இது முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், இதனால், துறைமுகத்துக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், அப்போதைய, துறைமுக இணை இயக்குநராக இருந்த புகழேந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று துறைமுக முன்னாள் இணை இயக்குநர் வீடு உள்பட 3 இடங்களில்...
வடசென்னை அனல் மின் நிலையம் நிலை – 3 ல் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் தலா 210 மெகாவாட் திறனில் 3 அலகுகளுடன் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அதன் அருகில் தலா, 600 மெகாவாட் திறனில் 2 அலகுகள் உடைய வடசென்னை விரிவாக்க அனல்...










