Google search engine
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.13) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். காரைக்கால், மயிலாடுதுறையில்.. தொடர்மழை காரணமாக மயிலாடுதுறை...
அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் உறுதிபட தெரிவித்தார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதற்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது வெளியிடுகிறது. போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் ஆவதாக டிஎன்பிஎஸ்சி மீது விமர்சனங்கள் இருந்துவந்த நிலையில், தற்போது நிலைமை அடியோடு மாறிவிட்டது. கடந்த...
சிறைக் கைதிகள் தயாரித்த பொருட்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று விற்பனை செய்யப்பட்டன. இதை காவல் துறையினர் ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர். சென்னை புழல், வேலூர், திருச்சி, மதுரை, கோவை போன்ற பெரிய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு சிறையிலேயே வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. சிறைக் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள், சிறையின் வெளியே, அலுவலகம் அமைத்து விற்பனை செய்யப்படுகின்றன. தமிழக சிறைத் துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை எழும்பூரில் சிறைச்சந்தை விற்பனை மையம்...
சென்னையில் உள்ள முப்படைகளின் படைக்கல தலைமையகத்தின் புதிய தலைவராக மூத்த கடற்படை அதிகாரி கமாடோர் சுரேஷ் பொறுப்பேற்றுள்ளார். கமாடோர் சுரேஷ் கடற்படையில் பணிபுரிந்தபோது தளவாடங்களை கையாளுவது, படைகளை அனுப்புவது, செயல் திட்ட உத்திகளை வகுப்பது ஆகியவற்றில் போதிய அனுபவம் பெற்றவர். அத்துடன், சிக்கலான ராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல், தேசிய பாதுகாப்புக்கு தேவையான தளவாடங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றிலும் திறன் பெற்றவர். இவரது தலைமையின் கீழ், சென்னையில் உள்ள படைக்கல தலைமையகம், துருப்புகள் மற்றும்...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.40,968.68 கோடியில் 10,14,959 குடும்பங்கள் பயன் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில்நுட்பக் கட்டுமானத்தை உறுதி செய்ய 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், பிரின்டர்கள் மற்றும்தடையில்லா மின்சாரம் வழங்கும்சாதனம்...
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். 14, 15-ம் தேதிகளில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென் தமிழகம், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது....
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில், பார்க் டவுன் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்வதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர் சென்னை எழும்பூர் - கடற்கரை வரை 4-வது பாதை அமைக்கும் பணி காரணமாக, சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளிலிருந்து நேரடியாக பறக்கும் ரயில்...
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மகிழும் வகையில் அவர்களது கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2019 ஜனவரி 25-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி, ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தைச் சொல்லி ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா எனக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப்படுத்தினார். அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பார்த்து,...
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் இயங்கும் விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி வாயுக்கசிவு காரணமாக 39 மாணவிகள் மயங்கியதால் பள்ளிக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. விடுப்பு முடிந்து தனியார் பள்ளி கடந்த நவ.4-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போதும் சில வகுப்பறைகளில் மாணவர்களுக்கு மீண்டும் வாயு நெடி உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 10 பேர் வரை மயங்கியதால் பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாசுக்...
காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திருநங்கைகளால் அப்பகுதியில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் மந்த்ரா. திருநங்கையான இவர், சமூக ஊடகங்களில் திருநங்கை தலைவிகளின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை நேற்று 200-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒரே நேரத்தில் திரண்டு முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த வேப்பேரி...