Google search engine
தமிழகத்தில் தினசரி மின்தேவை வரும் 2026-27ம் ஆண்டு 23,013 மெகாவாட்டாக அதிகரிக்கும் என மத்திய மின்சார ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது தினசரி மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. புதிய மின்இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் மின்நுகர்வு அதிகரிக்கிறது. கோடைக் காலத்தில் வீடு, அலுவலகங்களில் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மின்தேவை உச்ச...
மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழக சுற்றுலா துறை, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ரூ.100 கோடி செலவில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா என்ற பிரத்யேக பூங்காவை அமைக்க இருக்கிறது. தமிழக அரசின் சுற்றுலா துறை சார்பில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கோவளம் அருகே 223 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி செலவில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் உருவாக்கப்படும் இந்த பூங்காவில் சோலை...
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இந்தியவானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நேற்று முன்தினம் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தற்போது...
தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரத சாஹூ சமீபத்தில் மாற்றப்பட்டார். அவருக்கு பதில், தமிழக அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து, அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் தேர்வு செய்து அறிவித்தது. சத்யபிரத சாஹூ, கால்நடை பராமரிப்பு , மீன்வளம், பால்வளத்துறை செயலராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழக தலைமை...
சென்னை கோபாலபுரத்தில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் நீரிழிவு நோய்க்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்கவும், முதியவர்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘ஹெல்தி ஏஜிங் கிளினிக் மற்றும் மோகன்ஸ் ஆன் வீல்ஸ்’ ஆகிய இரண்டு திட்டங்களை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் தலைவர் மருத்துவர் வி.மோகன், நிர்வாக இயக்குநர் ம்ருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா, ஆலோசகர் மருத்துவர் எஸ்.உத்ரா ஆகியோர் கூறியதாவது: ஆண்டுதோறும் உலக...
இந்திய கல்விமுறையை சிதைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார். பி.செந்தில்குமார் என்பவர் எழுதிய "பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" நூல் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது. இந்நூலை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசியதாவது: நான் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகம் வந்தபோது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வீரர்களின் பட்டியலை தமிழக அரசிடம் கேட்டுப்பெற்றேன். அந்த...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சாலையோரம் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, கே.கே.நகர், வடபழனி,...
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா, நவ.24-ம் தேதி வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக நிறுவனத் தலைவர், எம்ஜிஆரின் துணைவியாரும், முன்னாள் முதல்வருமான ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழா, அதிமுக சார்பில் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், நவ.24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை...
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கின் விசாரணைக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை திரும்பப்பெற்றதை எதிர்த்தும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டதால் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 - 2001 திமுக ஆட்சியில் சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதில் ரூ.115 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக்கூறி கடந்த 2001-ம் ஆண்டு மறைந்த...
 பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளைச் சிறையில் இருந்த செல்வராஜிக்கு (50) திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், நேற்று முன்தினம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்வராஜ்க்கு, சிறுநீரகத்தில் கல் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குரிய சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்....