Google search engine
பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடருவதால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர், பல மாதங்களாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார். வேலைக்குகூட செல்லாமல் மற்றவர்களிடம் கடன்...
தேசிய சட்ட நாளை​யொட்டி அரசு அலுவல​கங்​கள், கட்சி அலுவல​கங்​களில் உறுதி​மொழி ஏற்கப்​பட்​டது. இந்திய அரசி​யலமைப்பு தினம் (தேசிய சட்ட நாள்) நேற்று நாடு முழு​வதும் கொண்​டாடப்​பட்​டது. இந்திய அரசி​யலமைப்பு சட்டத்​தின் 75-ம் ஆண்டு நாளை​யொட்டி சென்னை தலைமை செயல​கத்​தில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தலைமை​யில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்​கப்​பட்​டது. இந்நிகழ்​வில் நீர்​வளத் துறை அமைச்சர் துரை​முருகன் உள்ளிட்ட அமைச்​சர்​கள், தலைமைச் செயலர் நா.முரு​கானந்​தம், துறை செயலர்​கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்​து​கொண்​டனர்....
வங்கக் கடலில் நிலை கொண்​டுள்ள ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்​பெறக்​கூடும் என தெரி​வித்​துள்ள வானிலை மையம் கடலூர், மயிலாடு​துறை மாவட்​டங்​களுக்கு அதிக​னமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை​யும் விடுத்​துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென்​ மண்​டலத் தலைவர் எஸ்.பாலச்​சந்​திரன் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தென்​மேற்கு வங்கக் கடல் பகுதி​யில் நேற்று முன்​தினம் நிலை கொண்​டிருந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு...
சென்னை துறைமுகத்தில் கழிவு செய்யப்பட்ட இயந்திர இரும்பு பொருட்களுக்கான டெண்டர் அய்யப்பாக்கத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் சண்முகம் என்பவருக்கு வழங்கப்பட்டது. இது முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், இதனால், துறைமுகத்துக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், அப்போதைய, துறைமுக இணை இயக்குநராக இருந்த புகழேந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று துறைமுக முன்னாள் இணை இயக்குநர் வீடு உள்பட 3 இடங்களில்...
வடசென்னை அனல் மின் நிலையம் நிலை – 3 ல் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மின்வாரியம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் தலா 210 மெகாவாட் திறனில் 3 அலகுகளுடன் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அதன் அருகில் தலா, 600 மெகாவாட் திறனில் 2 அலகுகள் உடைய வடசென்னை விரிவாக்க அனல்...
சென்னை அப்போலோ மருத்​துவ​மனை​யில் நெஞ்​செரிச்சல் பிரச்​சினைக்கு சிகிச்சை பெற்று​வந்த இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி​காந்த தாஸ் உடல்​நிலை​யில் முன்னேற்றம் ஏற்பட்​ட​தால் வீடு திரும்பினார். சில தினங்​களுக்கு முன்பு சென்னை வந்த, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி​காந்த தாஸ். ரிசர்வ் வங்கி குடி​யிருப்​பில் தங்கியிருந்​தார். நேற்று முன்​தினம் இரவு அவருக்கு திடீர் உடல்​நலக் குறைவு ஏற்பட்​ட​தால், சென்னை ஆயிரம் விளக்​கில் உள்ள அப்போலோ மருத்​துவ​மனை​யில் அனும​திக்​கப்​பட்​டார். மருத்​துவர்கள் குழு​வினர்...
நீதித்​துறை மீது மக்கள் வைத்​துள்ள நம்பிக்கையை காப்​பாற்ற, ஊழலை ஒருபோதும் ஊக்கு​விக்​காதீர்கள் என இளம் வழக்​கறிஞர்​களுக்கு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் அறிவுரை வழங்​கினார். தமிழ்​நாடு மற்றும் புதுச்​சேரி பார் கவுன்​சில் சார்​பில் அரசி​யலமைப்பு சட்டதின விழா மற்றும் 1,200 புதிய வழக்​கறிஞர்கள் பார் கவுன்​சிலில் பதிவு செய்​யும் நிகழ்வு, சென்னை உயர் நீதி​மன்ற கலையரங்​கில் நேற்று மாலை நடைபெற்​றது. இந்நிகழ்​வில் பார் கவுன்​சில் தலைவர் பி.எஸ்​.அமல்​ராஜ் வரவேற்​றார்....
சென்னையில் பெய்த மழை காரணமாக சாலையோரம் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக அன்றைய தினம் முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. அதன்படி, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், ஐஸ் ஹவுஸ், நந்தனம், கிண்டி, மாமல்லபுரம், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர், கொளப்பாக்கம், மேற்கு தாம்பரம், எம்ஜிஆர் நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில்...
வடகிழக்குப் பருவமழையை யொட்டி விருகம்பாக்கம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். வடகிழக்குப் பருவமழை தொடங்கி, தமிழகம் முழுவதும் பெய்துவருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணத்தால் சென்னையில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. இதையடுத்து சென்னை அருகம்பாக்கம் மெட்ரோ அருகில் மற்றும் கோடம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதிகளில் உள்ள விருகம்பாக்கம்...
வங்கக் கடலில் நிலை கொண்​டுள்ள ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழை எச்சரிக்கை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து 400...