Google search engine
‘மழையை எதிர்​கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்’ என்று முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். சென்னை சோழிங்​கநல்​லூரில், மாற்றுத் திறனாளி​களுக்கான ‘விழுதுகள்’ சேவை மையம் திறப்பு விழா​வில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் பங்கேற்​றார். அப்போது செய்தி​யாளர்​களின் கேள்வி​களுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: டெல்டா பகுதி​களில் மழை அதிக​மாகப் பெய்​யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்​துள்ளதே? அதற்கான பணிகள் எல்லாம் முறைப்படி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சி​யர்​களுக்கு அறிவுறுத்​தல்கள் வழங்​கப்​பட்​டுள்ளன. அதிகாரி​களுக்​கும் உத்தர​விட்​டுள்​ளோம். அதுதவிர மண்டல​வாரியாக...
தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9-ம் தேதி கூடுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பதிலுரை அளித்தார். தொடர்ந்து, 19-ம் தேதி தமிழக அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசுவும்,...
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன முதல் அதிகனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது....
தமிழகத்தில் முதன்முதலாக, மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகளை வழங்கும் ‘விழுதுகள்’ சேவை மையத்தை சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 273 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில், சென்னையில் சமூக, பொருளாதார ரீதியாக முன்னேற விழையும் பகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில்...
சென்னை புரசைவாக்கம் தாலுகா அலுவலக வளாகத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையாக கொட்டப்பட்டிருந்தன. அவை தவறாக அச்சானதால் கழிவாக கிடந்தவை என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள புரசைவாக்கம் தாலுகா அலுவலக வளாகத்தில், அரசு கேபிள் நிறுவனத்தின் இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இம்மைய பணியாளர்கள் நேற்று, வாக்காளர் அட்டைகளை குப்பையில் கொட்டியுள்ளனர். அரசு அடையாள ஆவணங்களை இப்படி குப்பையில் கொட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு...
நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ‘ஈட் ரைட் கேம்பஸ்’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள முதன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தினந்தோறும் சராசரியாக 12,000 வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். அதேபோல் 3,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கும் வகையில் படுக்கை வசதிகளும் உள்ளன. உள்நோயாளிகளாக தங்குவோருக்கு ஏற்ற உணவுகளும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அளிக்கப்படுகின்றன. அந்த...
ஆன்லைன் வர்த்தகத்தில் சில்லறை வணிகப்பொருட்களை விற்பதை தடைசெய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள், திமுக வளர்ச்சி தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48 வது பிறந்த...
சென்னை வேளச்சேரி ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு எனக்கூறி 955 வீடுகளை அகற்ற கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதை கண்டித்து அப்பகுதி பெண்கள் குடும்பத்துடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள முக்கியமான ஏரிகளில் ஒன்றான வேளச்சேரி ஏரி மோசமான நிலையில் உள்ளதால், அதன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலையை மேம்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வேளச்சேரி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஜெகநாதபுரம், சசிநகர், லட்சுமிநகரில் அமைந்துள்ள 955...
கடற்படை தினத்தை முன்னிட்டு, சென்னைக்கு வந்துள்ள ‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற போர்க் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் டிச.4-ம் தேதியன்று இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியக் கடற்படை சார்பில், கடற்படை தின கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற பிரம்மாண்ட போர்க் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. இக்கப்பலுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அலுவலகம் சார்பில் உற்சாக வரவேற்பு...
சென்னை விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற ஆந்திரா நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். சென்னையில் இருந்து எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடிஸ் அபாபா செல்லும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை புறப்பட தயாராகி கொண்டிருந்தது. பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது, விமானத்தில் பயணம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தை ராமச்சந்திரா (35)...