பழைய ஓய்வூதிய திட்டம் கோரி அரசு ஊழியர்கள் விடிய விடிய போராட்டம் – தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேர் பங்கேற்பு
admin - 0
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்களின் தர்ணா போராட்டம் விடிய, விடிய நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி...
தமிழகத்தில், 19 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.7,375 கோடிக்கான புதிய முதலீடுகளுக்கு பிப்.10-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பட்ஜெட் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், பல்வேறு புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கவும் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த பிப்.10-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்,...
தெற்கு ரயில்வேயில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கான முதல் ஏசி மின்சார ரயில் தயாரிக்கும் பணி ஐசிஎஃப்-பில் நிறைவடைந்துள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தின் விரைவுப் பாதையில் ஏ.சி. மின்சார ரயில் இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே கடந்த 2019-ம் ஆண்டு பரிந்துரை செய்தது.
இதையடுத்து, ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்க சென்னை ஐசிஎஃப்-க்குரயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி, 12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில் தயாரிப்பு...
வேல் ஏந்தி காத்தருளும் தமிழ் கடவுள் முருகனின் அருள், ஞானத்துடன் நம்மை வழிநடத்தட்டும் என தைப்பூசத் திருநாளில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி: அனைவருக்கும் மகிழ்ச்சியான ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள். முருகனின் தெய்வீக அருள் நம்மை வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் வழிநடத்தட்டும். இந்த புனிதமான நாளில் அனைவருக்கும்...
விஜய் கட்சி நிர்வாகிகளுடன் 2-வது நாளாக பிரசாந்த் கிஷோர் ஆலோசனை: தவெகவுக்கு வியூகங்கள் வகுக்க ஒப்பந்தம்?
admin - 0
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் தவெக தலைமை நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர். இதில் தவெகவுக்கு 15 முதல் 20 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக அளிக்கப்பட்ட அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விஜய் கட்சிக்கு தேர்தல் வியூகங்கள் வகுக்க பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் தவெக தலைவர் விஜய்யின் வீட்டில், அவரை பிரசாந்த் கிஷோர் நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்....
அமைதிக்கு பேர் போன செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியமைக்காக அன்னூர் கஞ்சப்பள்ளியில் நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்திருப்பது அதிமுக-வுக்குள் பெரும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ‘இந்து தமிழ் திசை’க்கு செங்கோட்டையன் அளித்த நேர்காணலில், “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைப்பது தொடர்பான பேச்சு நடக்கிறது” என உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் - இபிஎஸ்சை சந்தித்தது உண்மைதான்...
அதிமுகவும் காங்கிரசும் எங்களுக்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பது ஏன்? – குமுறும் தேவேந்திர குல வேளாளர்கள்
admin - 0
தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். ஆனபோதும் சுதந்திரத்துக்குப் பிறகு தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை முக்கிய கட்சிகள் அளிக்கவில்லை என்பது இந்த மக்களின் நெடுநாளைய ஆதங்கமாக இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு தான் பட்டியல் சமூகத்தின் 7 உட்பிரிவு களை ஒருங்கிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர் சமூகம்’ என மத்திய பாஜக அரசு, அரசாணை பிறபித்தது.
இதன் தொடர்ச்சியாக மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, “தேவேந்திர...
அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி முதல்வர் ஸ்டாலின் திறந்து வருகிறார்: இபிஎஸ் குற்றச்சாட்டு
admin - 0
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அத்திக்கடவு-அவிநாசி 2-வது திட்டம் நிறைவேற்றப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றக் காரணமாக இருந்ததாக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு, அத்திக்கடவு-அவிநாசி திட்டக் கூட்டமைப்பினர் சார்பில் கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளி பகுதியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பழனிசாமி பேசியதாவது:
60 ஆண்டுகால கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பிறவிப் பயனை...
தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி மின்வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சுகாதாரத் துறை செயலராக இருந்த சுப்ரியா சாஹு உள்ளிட்டோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ளார். மாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை ஏற்படுத்த வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
admin - 0
பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் 10 மாணவிகளை பாலியல் கொடுமை செய்ததாக அதே பள்ளியின் அறிவியல் ஆசிரியர் இளையகண்ணு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. அரசு பள்ளிகள் மாணவிகளுக்கு...










