Google search engine
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது. தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்​கியது. தொடக்​கத்​தில் தேசிய கீதம் பாடப்​படாததை காரணம் காட்டி உரையை வாசிக்​காமல் ஆளுநர் ஆர்.என்​.ரவி வெளி​யேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்​கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை...
போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயக் கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடங்கிய போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் இழப்பை ஈடு செய்வது தொடர்பாக பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். கடந்த 21 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல்...
மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, மதவெறி அமைப்புகளை தமிழக மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மதச்சார்பற்ற கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பன்மைத்துவத்துக்கும், மதநல்லிணக்கத்துக்கும்...
தமிழக மாணவர்களுக்கு உரிய ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: தமிழகத்துக்கு எதிரான மத்திய பாஜக அரசின் விரோத மனப்பான்மைக்கு அளவே இல்லாமல் போகிறது. தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழி கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தமிழக மாணவர்களுக்குரிய...
திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த பயிர்க் கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியதற்கு சொன்னதையே மீண்டும் திருப்பிச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். தமிழக அரசின் கொள்கை குறிப்பில், கடந்த 2021-22 முதல் 2023-24 வரை தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடன்...
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரது முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த பெண் ஒருவர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கர்ப்பிணியான இவர் கோவை - திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் கடந்த 6-ம்...
அரசு மருத்​துவர்​களுக்கு நியாயமான ஊதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்​கும் வகையில் அரசாணை 354-ஐ அமல்​படுத்தக் கோரி இறுதிவரை போராடியவர் அரசு மருத்​துவர் லட்சுமி நரசிம்​மன். இவர் கடந்த 2020 பிப்​.6-ம் தேதி உயிரிழந்​தார். இதுவரை இந்த அரசாணை​யும் அமலாக​வில்லை. இந்த பின்னணி​யில் ‘மருத்​துவர் லட்சுமி நரசிம்​மனின் உயிர்த் தியாகத்​துக்கு மதிப்​பில்​லை​யா?’ என்ற தலைப்​பில் அரசு மருத்​துவர்​களுக்கான சட்டப் போராட்​டக்​குழு தலைவர் எஸ்.பெரு​மாள் பிள்ளை எழுதிய கட்டுரை ‘இந்து தமிழ் திசை’...
தமிழகத்​தில் இன்று​முதல் 15-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பு: தமிழகம், புதுச்​சேரி மற்றும் காரைக்​கால் பகுதி​களில் இன்று​முதல் 15-ம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளை​யில் லேசான பனிமூட்டம் காணப்​படும். ஞாயிற்றுக்​கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதிவான வெப்ப அளவு​களின்​படி, சமவெளி...
கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் தவெக வடசென்னை மாவட்டம் சார்பில் 33-வது விலையில்லா விருந்தகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் திறந்து வைத்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, விஜய்யை ஆட்சியில் அமர வைப்போம் என்று உறுதியுடன் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் 32 இடங்களில் விலையில்லா விருந்தகம் செயல்படுகிறது. இங்கு தினமும் காலையில் சுமார் 200 பேருக்கு இட்லி, வடை, பொங்கல் உள்ளிட்ட சிற்றுண்டி இலவசமாக...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, நாதக இடையே மறைமுக கூட்டணிக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கை: டெல்லி மாநிலத் தேர்தல் தோல்வி இண்டியா கூட்டணியின் தோல்வி. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து பிஹாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். எனவே, இண்டியா கூட்டணியின் கலந்தாய்வுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி...