சென்னை: இந்தி திணிப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை திமுக எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல. சுயமரியாதை, உரிமைக்குதான் திமுக குரல் கொடுக்கிறது என்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் பாஜக இல்லை என்றும் அவர் கூறினார்.
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திமுக மகளிர் அணி சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி...
சென்னை வானிலை ஆய்வு மைய இணையதள சேவையை தமிழில் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று ஓய்வு பெற்றார். புதிய தலைவராக பி.அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் பிறந்த எஸ்.பாலசந்திரன், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்று, பி.எச்.டியும் முடித்தார். தொடக்கத்தில் மத்திய நீர்வள ஆதாரத்துறையில் ஆராய்ச்சி உதவியாளராக...
பெரிய நிறுவன மருந்தகங்களில் ஆய்வு நடத்த அதிகாரிகள் தயக்கம்: மருந்து வணிகர்கள் குற்றச்சாட்டு
admin - 0
பெரிய நிறுவன மருந்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்த தயக்கம் காட்டுகின்றனர் என்று மருந்து வணிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் 42,000 சில்லறை மற்றும் மொத்த விற்பனை மருந்தகங்கள் உள்ளன.
மருத்துவர் பரிந்துரையின்றி கருத்தடை மற்றும் தூக்க மாத்திரை வழங்குதல், வாங்கிய மாத்திரைகளுக்கு உரிய ரசீது தராதது மற்றும் ஆவணங்கள் பராமரிக்காதது உள்ளிட்ட காரணங்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி,...
சிலை கடத்தல் வழக்குகளின் கோப்புகள் மாயமானது குறித்து விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்
admin - 0
சிலை கடத்தல் வழக்குகளின் கோப்புகள் மாயமானது குறித்து விசாரணை நடத்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியை ஒரு வாரத்துக்குள் நியமித்து வரும் ஏப்ரல் முதல் வாரத்துக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை...
வரி வருவாயில் மாநிலங்களின் பங்கை குறைப்பதா? – மத்திய அரசுக்கு ராமதாஸ், செல்வப்பெருந்தகை கண்டனம்
admin - 0
மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை குறைக்கும் முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்: மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை இப்போதுள்ள 41 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று 16-ம் நிதி ஆணையத்தை கேட்டு கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாநிலங்களின் நலன்களுக்கு எதிரான...
இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சென்னை ஐஐடியில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கவிழாவில் மத்திய கல்வி இணை அமைச்சர் சுகாந்தோ மஜும்தார் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை ஐஐடி-யில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான 2 நாள் தொழில்நுட்ப கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை மத்திய கல்வி இணை அமைச்சர் சுகாந்தோ மஜும்தார் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுமை கண்டுபிடிப்பு ஆகிய...
ரம்ஜான் நோன்பு நாளை (மார்ச் 2) தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். ரம்ஜான் மாதத்தின் முந்தைய மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் நோன்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
அந்த வகையில், நாளை (மார்ச் 2) முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘வெள்ளிக்கிழமை மாலை ரம்ஜான் மாத பிறை...
தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளி்ட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று (மார்ச் 1) தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழகத்தில்...
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில், சீமானிடம் வளசரவாக்கம் போலீஸார் நேற்று இரவு விசாரணை நடத்தினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். திரைப்பட இயக்குனராக பணியாற்றியபோது அவருக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளித்திருந்தார். இதையடுத்து,...
நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: இபிஎஸ்
admin - 0
நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக, சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும், என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக, புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி ஆகியவை சார்பில் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலங்களவை...










