தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கி ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில், அந்தக் கட்சிக்கு போதுமான வரவேற்பு இல்லை என்கின்றன விஜய்க்கு எதிரான கட்சிகள். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து பிரசாந்த் கிஷோரை கூட்டிவைத்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார் விஜய்.
பொதுவாக புதிதாக தொடங்கப்படும் கட்சிகளில் மாற்றுக் கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், நடிகர்கள் தாமாக வந்து இணைவது வழக்கம். விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது...
உதாசீனப்படுத்தப்படும் திமுகவின் உண்மை தொண்டர்கள்! – அடிமட்டத்தில் அலையடிக்கும் அதிருப்திகள்
admin - 0
“பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலையும் வெகு தொலைவில் இல்லை. இதற்கு நாங்கள் தயாராய் இல்லை. எனவே, இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” - அண்மையில் திமுக-வில் இருந்து விலகிய சேலம் மத்திய மாவட்ட ஒன்றிய பிரதிநிதி எழில் அரசன் விலகலுக்காக சொன்ன காரணம் இது.
இது உதாரணம் தான். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோல எழில் அரசன்கள் நூற்றுக் கணக்கில்,...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாரங்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, ரயில் மூலம் இன்று (பிப்.12) காலை சென்னை வருகிறார். அங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் அவர் காலை 8.05 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, நேற்று (பிப்.11) பிற்பகல் 2.45 மணிக்கு, விமானம்...
முதல்வர் மருந்தகங்கள் தொடங்க 840 பேருக்கு உரிமம்: தொழில் முனைவோருக்கு மானியம், கடனுதவி வழங்கவும் திட்டம்
admin - 0
தமிழகத்தில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதற்கு இதுவரை 840 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், மூலப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள்...
தமிழகத்தில் பிப்.10-ம் தேதி ஒரு நாளில் பத்திரப்பதிவு மூலம் ரூ.238 கோடி வசூல்: அமைச்சர் மூர்த்தி தகவல்
admin - 0
தமிழகத்தில் பிப்.10-ம் தேதி ஒரு நாள் மட்டும் பத்திரப்பதிவு மூலம் ரூ.237.98 கோடி வசூலாகி, புதிய மைல் கல் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்.10-ம் தேதி திங்கள்கிழமை அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. அதை ஏற்று பிப்.10-ம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்றார். அப்போது முதல்வரிடம் ஏராளமானோர் கோரிக்கை மனு அளித்தனர். ஒருவர் முதல்வரிடம் பேச முற்பட்டார். ‘அவரிடம் என்ன வேண்டும்?’ என்று முதல்வர் கேட்டார்.
அதற்கு அவர், ‘எனது பெயர் சுரேஷ். நான் திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவன். எனது மகள் 6-வது படிக்கிறாள். அவளுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. ஸ்டான்லி மருத்துவமனை உட்பட பல இடங்களில் காதொலி...
சென்னையில் தனியார் மூலம் இயக்கும் வகையில் 600 மின்சார தாழ்தள பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 600 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதனை தயாரித்து வழங்குவதோடு, பராமரித்து இயக்க கூட்டு ஒப்பந்த அடிப்படையில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ள நிறுவனங்கள் இணையவழியில் ஏப்.3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அதன்படி,...
போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததை கண்டித்து நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம்
admin - 0
போரூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததைக் கண்டித்து நோயாளிகளுடன் நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை போரூர் அடுத்த சின்ன போரூர் பகுதியில் சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 7 மணியளவில் புறநோயாளிகள் சீட்டு வாங்கிய ஏராளமான நோயாளிகள் மருத்துவரைப் பார்க்க காத்திருந்தனர். மருத்துவர்கள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த நோயாளிகள் செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கால் வலிக்கு சிகிச்சைக்கு...
பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020-ம் ஆண்டு மறைந்தார். அவரது புகழைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதன்மைச் சாலைக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை என...
கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு விசாரணையை 4 வாரத்தில் தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
admin - 0
கலாஷேத்ரா நடனப்பள்ளியின் முன்னாள் பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கு விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும் என சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நடனப்பள்ளியில் கடந்த 1995 - 2001 காலகட்டத்தில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், தன்னை அந்த நடனப்பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக போலீஸில் புகார் அளித்தார்.
ஆனால் ஶ்ரீஜித் கிருஷ்ணா...










