Google search engine
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி. கராத்தே மாஸ்டரான இவர் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான இவர், நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பலருக்கும் வில்வித்தை பயிற்சியும் அளித்துள்ளார்....
ராமாபுரத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் வீட்டை விட்டுவெளியேறினர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. சென்னை ராமாபுரம் கோத்தாரி நகரில் செயல்படும் பழைய பொருட்கள் விற்பனை கடையில் நேற்று மாலை திடீரென தீ பிடித்தது. பின்னர், அருகே இருந்த கார் மெக்கானிக் செட், பர்னிச்சர் குடோன் என அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவியது. தகவல் அறிந்து...
இந்திய ராணுவத்தில், அக்னிவீர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்திய ராணுவத்தில், அக்னிவீர் பொதுப் பணி, அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் எழுத்தர் மற்றும் ஸ்டோர்கீப்பர் தொழில்நுட்பம், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (10-ம் வகுப்பு தேர்ச்சி), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (8-ம் வகுப்பு தேர்ச்சி), சிப்பாய் நிலையிலான தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிப்பாய் நிலையிலான பார்மா, அக்னிவீர் பொதுப் பணி (ராணுவ மகளிர் காவல்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தில் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,...
சத்​துணவு ஊழியர்​களாக பணி​யாற்றி ஓய்​வு​ பெற்​றவர்​களுக்கு அகவிலைப்​படி​யுடன் கூடிய ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும். அரசு ஊழியர்​களுக்கு வழங்​கு​வது​போல் மருத்​து​வக் காப்​பீடு வழங்க வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தமிழ்​நாடு சத்​துணவு மற்​றும் அங்​கன்​வாடி ஓய்​வூ​தி​யர் சங்​கத்​தின் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே நேற்று நடை​பெற்​றது. இதில் 100-க்​கும் மேற்​பட்ட சத்​துணவு ஊழியர்​கள் பங்​கேற்​றனர். ஆர்ப்பாட்​டத்​துக்கு சங்​கத்​தின் மாவட்டத் தலை​வர் ஏ.முத்​துலிங்​கம் தலைமை தாங்​கி​னார். ஆர்ப்​பாட்டம் குறித்து...
டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது என்றும், சத்தீஸ்கரை விட தமிழகத்தில் மிகப்பெரிய மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை டாஸ்மாக் நிறுவனம், மதுபான உற்பத்தி நிறுவனங்கள், பாட்டில் உற்பத்தி நிறுவனங்கள் என மூன்று நிறுவனங்கள் உள்ளன. இதில் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 40 சதவீதம் மதுபானம் முறையான...
தமிழக அரசின் பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைக்கும் பட்ஜெட் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.: தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் வரவேற்கத்தக்வை. தமிழ் மொழி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: பல்வேறு சோதனைகள், அடக்குமுறைகளைத் தாண்டி,...
நிறைவேற்றவே முடியாத அறிவிப்புகளுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக பட்ஜெட்டில், மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், கல்விக் கடன் ரத்து, காஸ் சிலிண்டர் மானியம், 100 நாள் வேலைத்திட்ட ஊதிய உயர்வு போன்ற திமுகவின் வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்குவது மட்டும்தான்...
அரசியல் கட்சிகளின் அன்றாட பேரணி, பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு அளிப்பது போலீஸாரின் வேலை அல்ல என்றும், இனி வரும் நாட்களில் அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்தால் அதற்கு சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே...
தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு தொழில் துறையினர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். சென்னை தொழில், வர்த்தக சபை தலைவர் ராம்குமார் சங்கர்: தமிழக அரசின் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் சர்வதேச நகரம், ரூ.3,500 கோடியில் குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டம், ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் முதலீடுகளை...
தமிழக பட்ஜெட் தொடர்பாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.ஹரிசங்கர்: அரசு ஊழியர்கள் தொடர்பாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பொய்யாகிவிட்டது. 2026-2027 பட்ஜெட்டில் வெளியிட வேண்டிய சரண் விடுப்பு சலுகை அறிவிப்பை தற்போது வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்-ஆசிரியர் சமூகத்தை திமுக அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது. அரசுத் துறைகளில்...