Google search engine
கடந்த 2024-25-ம் நிதி ஆண்டில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மி்ன்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து, புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த 2023-24ம் நிதி ஆண்டில், தமிழகத்தின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி ஒப்பந்த மதிப்பு 9.56 பில்லியன் டாலர்கள் என பதிவாகியுள்ளது. இது கர்நாடகா (4.60 பில்லியன் டாலர்), உத்தர பிரதேசம் (4.46 பில்லியன் டாலர்) ஆகிய மாநிலங்களைவிட 2 மடங்கு அதிகம். இந்நிலையில், இந்த...
வேடசந்தூர் அருகே நடந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த துணை ஆட்சியர் சிவக்குமார் உயிரிழந்தார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய சேராவூரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(46). நாமக்கல் மாவட்டம், மோகனூர் சர்க்கரை ஆலையில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வந்தார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, கொடைக்கானல் கோட்டாட்சியராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தனது காரில், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி இரவு மோகனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை...
இந்த ஆண்டு 50 ஆயிரம் புதிய விவசாய மின்இணைப்புகள் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: திமுக அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 27.76 லட்சம் மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 1.82 லட்சம் விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஏப்.1-ம் தேதியன்று தமிழகத்தின்...
எழுபது வயதை எட்டிய அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது உள்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நேரத்தில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்; எழுபது வயதடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கப்படாத சத்துணவு...
திமுக​வின் ஆட்சி என்​பது நீதிக்​கட்​சி​யின் தொடர்ச்​சி​யான ஆட்​சி​தான் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பெரு​மிதத்​துடன் கூறி​னார். தி​ரா​விட அறநெறி​யாளர் தமிழ்​வேள் பி.டி.​ராஜன் குறித்த `வாழ்வே வரலாறு’ நூல் வெளி​யீட்டு விழா, சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நூலை வெளி​யிட்டு பேசி​ய​தாவது:‘வாழ்வே வரலாறு’ என்ற நூலை நீதிக்​கட்​சி​யின் வழித்​தடத்​தில் உரு​வான திமுக தலை​வ​ராக இருந்து வெளி​யிடு​வதை என் வாழ்​நாளில் கிடைத்த பெரு​மை​யாக கருதுகிறேன். 1936-ல் ஒருங்​கிணைந்த சென்னை மாகாணத்​தின்...
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், பரிவோடும் முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையினை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்ததாகத் தெரிவித்திருந்தார். மவுன...
ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில் தேசிய அளவில் 1009 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழக அளவில் தருமபுரியைச் சேர்ந்த சிவசந்திரன் என்ற பட்டதாரி முதலிடத்தை பிடித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என 3...
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் தலைவர் சாந்தா உருவச்சிலை மற்றும் நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலகப் புகழ்பெற்ற புற்றுநோயியல் மருத்துவர் சாந்தா கடந்த 1927-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி பிறந்தார். மயிலாப்பூர் - தேசிய பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, 1949-ம் ஆண்டு தனது மருத்துவப் பட்டப் படிப்பு மற்றும்...
தமிழகத்தில் சூரியசக்தி மின்னுற்பத்தி 10 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியுள்ளது. சூரியசக்தி மின்னுற்பத்திக்கு சூரியனின் வெப்பத்தை விட ஒளியே முக்கியம். அந்த வகையில், தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சூழல் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையும், மற்ற மாதங்களில் மழை பெய்யும் நாட்களைத் தவிர்த்து காலை 6.30...
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: மதுவிலக்கு அமலாக்க போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு, குற்ற புலானய்வு பிரிவுடன் இணைக்கப்பட்டு அமலாக்க பணியகம் குற்றப் புலனாய்வு பிரிவு என்ற ஒரு புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரேதாமாக மதுபானம்...